மன்னார் சவுத்பார் தாழ்வுபாடு கடற்கரையில் அனாமதேய கழிவுகள் கரை ஒதுங்கியுள்ளதை அப்பகுதி மீனவர்கள் அவதானித்து உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்...
மன்னார் சவுத்பார் தாழ்வுபாடு கடற்கரையில் அனாமதேய கழிவுகள் கரை ஒதுங்கியுள்ளதை அப்பகுதி மீனவர்கள் அவதானித்து உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்ததின் அடிப்படையில் இந்த கழிவுகள் யாவும் அண்மையில் இந்திய கேரளா கடலில் தீப்பற்றி எரிந்து மூழ்கிய கப்பலின் கழிவுகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
LINK:கடன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றுகிறது?
மீனவர்கள் சங்க பிரதிநிதிகள்
குறித்த இடங்களுக்கு மன்னாரில் உள்ள சில மீனவ அமைப்பின் தலைவர்களும் சென்று பார்வையிட்டு உரிய இடங்களுக்கு தகவல்களை தெரிவித்துள்ளனர்
இந்த கழிவுகள் யாவும் நேற்று (12) மாலை முதல் இன்றும் (13) அதிகளவாக அவதானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டடு
இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய X-Press Pearl பேர்ள் கப்பல்
அத்துடன் சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய பேர்ள் கப்பலில் இருந்தும் இவ்வாறான கழிவுகள் மன்னார் கடற்பரப்புகளில் கரை ஒதுங்கியதுடன் பல கடல் வாழ் உயிரினங்களும் உயிரிழந்து மீன் பிடி தொழிலுக்கும் மீனவர்களுக்கும் அச்சத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியிருந்தது
LINK:கடன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றுகிறது?
அச்சத்தில் மீனவர்கள்
இந்த நிலையில் தற்போது மன்னார் மாவட்டத்தில் தாழ்வுபாடு சவுத்பார் கடற்கரையில் குறித்த கழிவுகள் கரை ஒதுங்கிய சம்பவமானது மீனவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது
X-Press கப்பல் ஒரு மீள் பார்வை
(X-Press பேர்ள் (X-Press Pearl) என்பது சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சூப்பர் ஈக்கோ 2700–வகை கொள்கலன் கப்பல் ஆகும். 186 மீட்டர் நீளமான இக்கப்பல் 2021 பெப்பிரவரியில் தனது சேவையைத் தொடங்கியது எக்சு-பிரசு பீடர்சு என்ற நிறுவனம் இதனை நிர்வகித்து வருகிறது
2021 மே 20 இல் இக்கப்பல் இலங்கையின் கொழும்புக்கு அண்மையில் நீர்கொழும்பை அண்டிய கரையோரப் பகுதியில் வைத்துத் தீப்பற்றியது.
முயற்சிகள் தோல்வி
2021 மே 27 காலப்பகுதியில் அப்போதும் அது மிதந்து கொண்டிருந்ததால் 2021 மே 27 பிற்பகுதியில் தீயணைப்புப் படைகளினால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனக் கருதப்பட்டது.
கப்பல் மூழ்கியது
12 நாட்களாக எரிந்தபின்னர் 2021 ஜீன் 2 இல் கப்பலை ஆழமான நீருக்குள் இழுத்துச் செல்ல முயன்ற போது அது மூழ்க ஆரம்பித்தது.
மோசமான சூழல் பேரழிவு
கப்பலில் உள்ள எண்ணெய் மற்றும் செறிந்த நைத்திரிக்கு அமிலம் போன்ற நச்சு வேதிப் பொருட்கள் காரணமாக இந்த நிகழ்வு இலங்கை வரலாற்றிலேயே மிக மோசமான கடல் சுற்றுச்சூழல் பேரழிவாகக் கருதப்பட்டது.
நைட்ரிக் அமிலக் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக இலங்கை அதிகாரிகள் நம்புகின்றனர்இ இதனை மே 11 முதல் கப்பலின் குழுவினர் அறிந்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது.
அபாயகரமான பொருட்கள்
இந்தக் கப்பல் 25 டன் செறிந்த அரிக்கும் அமிலத்தை ஏற்றிச் சென்றது. அந்த வகை அமிலமானதுஇ உரங்கள் மற்றும் வெடிபொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுபவையாகும்
அனுமதி மறுப்பு
இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் கத்தார் ஹமாத் துறைமுகத்திலும் இந்தியாவின் ஹசிரா துறைமுகத்திலும் இக்கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இலங்கை அரசு அனுமதி
இந்த நிலையில் இலங்கை அரசு அனுமதி வழங்கியது மட்டுமல்லமால் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஏற்புடையதான இடைக்கால நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் தனது இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளது.
நட்ட ஈட்டுத் தொகை
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இடைக்கால நட்டஈடாக 8 இலட்சத்து 78 ஆயிரம் டொலர் மற்றும் 16 மில்லியன் ரூபா கடல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் கோரியிருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
LINKகடன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றுகிறது?
அத்துடன் இடைக்கால நட்டஈடாக வழங்கப்படும் இந்த தொகை கப்பல் தீப்பற்றியதால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகங்கத்துக்கும் கடல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் வழங்க இருப்பதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
No comments