Page Nav

HIDE

Breaking News:

latest

வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு இ.போ.ச பேரூந்து தொடர்பில் பல முறைப்பாடு - உடனடி நடவடிக்கை எடுத்த துணை முதல்வர்

வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி இ.போ.ச வவுனியா சாலை சொந்தமான பேரூந்து தினசரி காலை 6.30 மணிக்கு புறப்படுகின்றது ...

வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி இ.போ.ச வவுனியா சாலை சொந்தமான பேரூந்து தினசரி காலை 6.30 மணிக்கு புறப்படுகின்றது . எனினும் குறித்த சேவையில் தமக்கு பல்வேறு குறைப்பாடுகள் நிலவுவதாக பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையினையடுத்து வவுனியா மாநகர துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்களினால் உடனடியாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது


 குறித்த சேவை பேருந்தில் அரச மற்றும் தனியார் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் உட்பட பலர் பயணிப்பதுடன் பேருந்தின் அளவு சிறியதாக உள்ளதாகவும் , அளவுக்கு அதிகமான பயணிகளை பேருந்தில் ஏற்றுவதாலும் மூச்சுத்தினறல்கள் , சீண்டல்கள் , சுகாதார சீர்கேடுகள் நிலவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகிறது. 

அரச,தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள்  இதற்கு உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு வவுனியா மாநகரசபை துணை முதல்வரிடம் கோரிக்கையினை முன்னேடுத்திருந்தனர் 

 இந்நிலையில் இன்று (26.05) இ.போ.ச வவுனியா சாலைக்கு சென்ற மாநகரசபை துணை முதல்வர் சாலை முகாமையாளருடன் கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தமையுடன் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றினையும் சாலை முகாமையாளரிடம் கையளித்திருந்தார். 

இதனையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை மக்கள் சிரமமின்றி பயணிக்ககூடிய வகையில் பெரிய பேரூந்தினை அனுப்பி வைப்பதாக உறுதியளித்திருந்தமையுடன் தமது சாலையின் குறைபாடுகள் மற்றும் தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பிலும் தமது விளக்கத்தினை சாலை முகாமையாளர் வெளிப்படுத்தமையுடன் அதற்குறிய தீர்வினையும் தன்னால் இயன்றவகையில் பெற்றுத்தருவதாக மாநகர துணை முதல்வர் வாக்குறுதியளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது


No comments