மன்னார் மாவட்டத்தில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி,மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்...
மன்னார் மாவட்டத்தில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி,மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் புதன் கிழமை (11) வரலாறு காணாத மக்கள் பேரணி நடைபெற்றது
இந்த பேரணியானது இன்றைய தினம் காலை ஒன்பது மணியளவில் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் நகர சபை மைதானத்தில் குறித்த பேரணி ஆரம்பமாகியது
பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன
இந்த கவனயீர்ப்பு பேரணியில் மதத் தலைவர்கள், மீனவர்சங்க அமைப்புகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், யுவதிகள்,பொது மக்கள் என்று பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.
பேருந்து ஏற்பாடுகள்
மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களிலும் இருந்து ஒழுங்குகள் செய்யப்பட்ட பேருந்துகளில் உள்ளுர் அமைப்பின் பிரதிநிதிகளும், பெண்கள் அமைப்புகளும்,பெருமளவில் கலந்து கொண்டார்கள்
கடற்கரை ஓரங்களில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்:
சுற்றுச்சூழல் பாதிப்புகள்:
பறவைகள் மற்றும் வவ்வால்கள் பாதிப்பு: காற்றாலைகள் சுழலும்போது பறவைகள் மற்றும் வவ்வால்கள் அடிபட்டு இறக்க நேரிடலாம். இவை முக்கியமான சுற்றுச்சூழல் உயிரினங்கள்.
இதையும் வாசியுங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டிய நெடுந்தீவு சுற்றுலாத் தள் ம்
கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்பு: கடலுக்குள் காற்றாலைகளை அமைக்கும்போது கடலின் அடிப்பகுதி மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படலாம். கட்டுமானப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடங்களை அழிக்கக்கூடும்.
அலைகளின் திசை மாற்றம்: காற்றாலைகள் அலைகளின் திசையை மாற்றி கடற்கரை அரிப்பை ஏற்படுத்தலாம்.
ஒலி மாசுபாடு: காற்றாலைகள் தொடர்ந்து இயங்குவதால் ஏற்படும் ஒலி மாசுபாடு கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இடையூறு விளைவிக்கும்.
காந்தப்புலன் பாதிப்பு: காற்றாலைகள் வெளியிடும் காந்தப்புலன் காரணமாக கடலில் இருக்கும் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படலாம்.
கார்பன் உமிழ்வு: காற்றாலை மின் உற்பத்தி பசுமை ஆற்றல் முறையாக கருதப்பட்டாலும், உற்பத்தி, நிறுவுதல் மற்றும் அகற்றுதல் போன்ற செயல்பாடுகளின்போது கார்பன் வெளியேற்றப்படலாம்.
பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகள்:
மீன்பிடி தொழில் பாதிப்பு: காற்றாலைகள் அமைப்பதால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படலாம், ஏனெனில் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்படலாம்.
சுற்றுலா பாதிப்பு: கடற்கரை ஓரங்களில் காற்றாலைகள் அமைப்பதால் இயற்கை அழகு குறைந்து சுற்றுலா பாதிக்கப்படலாம்.
நில மதிப்பு குறைதல்: காற்றாலைகள் அருகே உள்ள நிலங்களின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது.
வேலைவாய்ப்பு குறைவு: மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதால், அதைச் சார்ந்திருக்கும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகள் குறையலாம்
.மற்ற பாதிப்புகள்:
இந்த பாதிப்புகளைக் குறைப்பதற்கு, காற்றாலைகளை அமைப்பதற்கு முன் விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental Impact Assessment) செய்வது அவசியம். மேலும், பொருத்தமான இடங்களைத் தேர்ந்தெடுப்பது, மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மற்றும் உள்ளூர் சமூகத்தினருடன் கலந்து ஆலோசிப்பது ஆகியவை முக்கியம்.
இவ்வாறான ஆலோசனைகள் மக்களிடம் கருத்துக் கேட்டல் செயற்பாடுகள் முன் கூட்டியே செய்யவில்லை என்பது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்தாக இருந்தது
கோஷங்களும் பதாதைகளும்
குறித்த பேரணியில் கலந்து கொண்வர்கள் எமது மண்ணின் வளங்களை அழிக்காதே, வளங்களை அழிப்பவர்கள் மன்னார் தீவை விட்டு வெளியேறுங்கள், போன்ற பல்வேறு பட்ட கோஷங்கள், பதாதைகளுடன் சின்னக்கடை வழியாக மன்னார்,கச்சேரி முன் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மகஜர் வாசிப்பு
பின்னர் நாட்டின் ஜனாதிபதிக்கான மகஜர் பேரணி ஏற்பாட்டுக் குழுவினரால் பொது வெளியில் வாசித்து காட்டப்பட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களிடம் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான மகஜர் கையளிக்கப்பட்டது
நீரிழிவு நோய் ஏற்பட முக்கிய காரணங்கள் என்ன? எவ்வாறு கட்டுப்படுத்துவது
சீராக நடைபெற்ற பேரணி
குறித்த பேரணியானது பல்லாயிர கணக்கான மக்கள் பங்குபற்றுதலுடன் மன்னார் நகரசபை மைதானத்திலிருந்து பேரணியாக வருகை தந்து மன்னார் கச்சேரி சுற்று வட்டத்தின் முன் கோஷங்கள், பதைகளுடன் நடைபெற்றாலும் பேரணியில் பங்குபற்றிய அனைவரும் சமூக ஒழுங்கு விதிகளை கடைபித்து போக்குவரத்துக்கும் பொதுச் சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments