மன்னார் எமில் நகர் புனித சூசையப்பர் விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியானது குறிப்பிட்ட சிலரால் எந்த ஒரு வேலைக...
மன்னார் எமில் நகர் புனித சூசையப்பர் விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியானது குறிப்பிட்ட சிலரால் எந்த ஒரு வேலைகளும் மைதானத்தில் செய்யாமல் அனைத்து வேலைகளும் நிறைவு பெற்றதாகபணம் எடுக்ககப்பட்டுள்ளது
4/12 கோடி மோசடி
இது தொடர்பாக புனித சூசையப்பர் விளையாட்டுக் கழக நிர்வாகத்தினர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பல தகவல்களை பெற்றுள்ளனர் அதில் கிட்டத்தட்ட 4/12 கோடி மோசடி நிதி மோசடி நடைபெற்றதை உறுதி செய்த பின் விளையாட்டுக் கழக நிர்வாகத்தினர் அண்மையில் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்த விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இவை தொடர்பாக தெரிவித்திருந்தனர்
இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் புயல் பாதுகாப்பு மண்டபங்கள் அவசரத் தேவை
அமைச்சரின் உத்தரவாதம்
விளையாட்டுக் கழக நிர்வாகத்தினரின் அழைப்பை ஏற்று மைதானத்தை பார்வையிட்ட பின்னர் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் மோசடிக்காரர்களை அடையாளப்படுத்துவதாகவும் குறித்த விளையாட்டு மைதானதம்தை மீண்டு அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் எடுப்பதாகவும் தெரிவித்திருந்தார் ஆனால் மாதங்கள் கடந்து விட்டது இன்னும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று விளையாட்டு வீரர்கள் கவலை தெரிவிக்கின்றனர்
கடந்த ஏப்ரல் மாதம் ஊடக சந்திப்பு
இந்த விடயம் தொடர்பாக விளையாட்டுக் கழகத்தினர் கடந்த கடந்த ஏப்ரல் மாதம் ஊடகத்தை சந்தித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர் ஆனால் இன்று வரை எந்த நண்மையான பதிலும் கிடைக்கவில்லை
குறித்த ஊடக சந்திப்பின் விபரங்கள்
விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு வந்த பெருந்தொகை நிதி மோசடி விரைவில் அனைத்து கழகங்களின் ஆதரவுடன் போராட்டம் நடைபெறும் என்று மன்னார் எமில் நகர் புனித சூசையப்பர் விளையாட்டுக்கழகத்தினர் தெரிவிவித்திருந்தனர் அதன் விபரம் வருமாறு
மன்னார் எமில்நகர் புனித சூசையப்பர் விளையாட்டு கழக மைதான அபிவிருத்திக்கு என கடந்த 2016ல் ஒதுக் கீடு செய்யப்பட்ட 5.9. மில்லியன் ரூபா நிதியில் வேலைகள் எதுவும் செய்யாமல் 4 அரை கோடி ரூபா பணத்தை பெற்று நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது
மோசடி தொடர்பாக விளையாட்டுக்கழக நிர்வாகத்தினர் வெளியிட்ட வீடியோ காணொளியை பார்வையிட
இந்த விடயம் தொடர்பில் அண்மையில் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்த விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கழகத்தினர் விவரங்களை தெரிவித்துள்ளனர் இதன்போது பதில் அளித்த அமைச்சர் இரண்டு மாத காலத்திற்குள் குறித்த மோசடி தொடர்பான விடயங்களை வெளியிடுவதாகவும் மைதான புனரமைப்பு பணிகளை துரித படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்
பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
அமைச்சர் கூறியது போல் இரண்டு மாத காலத்திற்குள் எமது மைதானத்தின் அபிவிருத்திக்கு என்று ஒதுக்கப்பட்ட நிதியினை துஷ்பிரயோக மோசடியில் ஈடுபட்டவர்களை எமக்கும் பொது மக்களுக்கும் அம்பலப் படுத்தாவிட்டால் நாம் ஏற்கனவே திட்டமிட்டது போல் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து விளையாட்டு கழகங்களின் ஆதரவுடன் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்வோம் என்று புனித சூசையப்பர் விளையாட்டுக் கழகத்தினர் தெரிவித்தனர்
இந்த விடயம் தொடர்பில் மன்னார் எமில்நகர் புனித சூசையப்பர் விளையாட்டு கழக தலைவர் ரமேஸ் கருத்து தெரிவிக்கையில்
எமது மைதானத்தை புனரமைபப்பதற்காக பல முயற்சிகள் எடுத்தோம் அதனடிப்படையில் எமது மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி தவறான முறையில் கையாளப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டு அதனை கண்டுபிடித்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டிருந்தோம் அதற்கு சரியான பதில் கிடைக்காத நிலையில் எமது வீரர்களும் சரி,ஊர் மக்களும் சரி, மன விரத்தில் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்று செய்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம்
ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தம்
இந்த நேரத்தில்தான் எமது மாவட்டத்திற்கு விளையாட்டு துறை அமைச்சர் விஜயம் செய்திருந்தார் கடந்த சனிக்கிழமை எமது மைதானத்தையும் பார்வையிட்டிருந்தார் எமது கோரிக்கையினை நாங்கள் முன் வைத்திருந்தோம் அதாவது இந்த மைதானம் புனரமைப்புக்கு ஒதுக்கப்பட்ட நீதி யாரால் சூறையாடப்பட்டது என்பதனை இரண்டு மாதத்திற்குள் வெளிப்படுத்துவதாகவும் எமது மைதானத்திற்கு செய்ய வேண்டிய வேலை திட்டங்களை மீண்டும் செய்து தருவதற்கு வழி செய்வதாகவும் உறுதியளித்திருந்தால் நாங்கள் செய்ய இருந்த பாரிய ஆர்ப்பாட்டத்தினை தற்காலிகமாக கைவிட்டு அமைச்சரின் முடிவை பார்த்து செய்வதாக தீர்மானத்திருக்கின்றோம்
நிதி மோசடியின் விபரம்
மனார் மாவட்டத்தில் மிகவும் முன்னணியில் இருக்கும் இந்த புனித சூசையப்பர் கழகம் எமக்கு நல்லதொரு மைதானம் அமையாமல் இருப்பது வேதனைக்குரிய விடயம் இன்று நறுவலிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் எமது மைதானத்தில் அமைக்க வேண்டியது நிதி பற்றாக்குறை இருந்ததால் மைதானத்திற்கு தேவையான மேலதிக நிதியினை பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் அவர்களை சந்தித்து பாராளுமன்றம் சென்று மேலதிகமாக ஆறு கோடி நிதியினை இந்த புரொஜெக்ட்டில் இணைக்கப்பட்டது
பல காரணங்களால் எமது மைதானத்தில் அமைக்கப்படாமல் நறுவலிக்குளம் பகுதிக்கு அது மாற்றப்பட்டது அதனால் நாங்கள் மேலதிகமாக அனுமதி எடுத்த அந்த 6 கோடி நிதியை எமது இந்த மைதான புணரமைப்புக்கு மாற்றித் தருமாறு கூறியிருந்தோம் அவர்களும் அதற்கு உடன்பட்டு அந்த ஆறு கோடி நிதியில் எமது மைதானத்திற்கு நேரடியாக அவர்களே வேலையை செய்வதற்கு உடன்பட்டு இருந்தார்கள்
குறித்த வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது எங்களுடைய கழகங்களில் வேறு நிர்வாகங்களும் மாற்றப்பட்டமையினால் எம்மால் அதில் முழுமையாக தலையிட முடியாமல் இருந்தது ஆனால் வேலை செய்து முடியும்போது அந்த ஆறு கோடிக்கு உரிய வேலை செய்யப்படவில்லை என்பதனை நாங்கள் உணர்ந்து கொண்டோம் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கேட்டபோது எமக்கு சரியான பதில் கிடைக்கவில்லை
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
அதற்காக 2024 ஆம் ஆண்டு மீண்டும் எமது நிர்வாகத்திற்கு நாங்கள் வந்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இதனை பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் விண்ணப்பித்திருந்தோம் அதனடிப்படையில் 2024 ஆம் ஆண்டு 2ம் மாதம் நாங்கள் கொடுத்த விண்ணப்பத்திற்கு 7 மாதங்கள் கழித்து ஒன்பதாம் (2024) மாதம் தான் எமக்குரிய பதில் கிடைத்தது அவர்களின் பதிலின் பிரகாரம் இந்த மைதானத்தில் நான்கரை கோடிக்கு வேலைகள் செய்யப்பட்டு பணம் எடுக்கப்பட்டுள்ளது
அதில் மூன்று பிரிவாக செய்யப்பட்ட வேலையில் மைதானத்திற்கு மண் நிரப்புவது, பார்வையாளர் அரங்குசெய்வது, வடிகான் அமைப்பது, இந்த மூன்று வேலை திட்டங்களில் மைதானத்திற்கு மண் நிரப்புவது மட்டுமே செய்து இருக்கிறார்கள் அதுவும் முழுமையாக செய்யப்படவில்லை மைதானத்தின் மேல் மேல் புற்கள் பதித்து தருவதாகவும் கூறி இருந்தது அதுவும் செய்யப்படவில்லை
வாழ்வில் வெற்றி பெற பண முகாமைத்துவம் இலகுவான முறையில்-ஜெகன்
இந்த பார்வையாளர் அரங்கு அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் வேலை திட்டம் மாத்திரமே நடைபெற்றது அதற்குரிய எந்த வேலை திட்டங்களும் செய்யப்படவில்லை ஆகவே இந்த நான்கரை கோடி பணம் யாரால் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதனை எமக்கு தெரியப்படுத்த வேண்டும் எமது வீரர்களும் சரி எமது ஊர் மக்களும் சரி ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றார்கள் அதற்குரிய பதிலை இரண்டு மாதத்திற்குள் விளையாட்டு துறை அமைச்சர் தருவார் என்று அதன் பிறகு எமது அடுத்த கட்ட நடவடிக்கையை தொடர்வதற்கு நாங்கள் முடிவு செய்து இருக்கின்றோம் என்று விளையாட்டுக் கழக தலைவர் தெரிவித்தார்
மோசடி தொடர்பாக விளையாட்டுக்கழக நிர்வாகத்தினர் வெளியிட்ட வீடியோ காணொளியை பார்வையிட
No comments