மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட போலி மதகுரு கைது மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் மன்னார் மாவட்...
மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட போலி மதகுரு கைது
மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்
மன்னார் மாவட்டத்தில் கடந்த 27ஆம் திகதி திங்கள் கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த நபர்
ஒருவர் கத்தோலிக்க குருக்கள் அணியும் ஆடையான வெள்ளை அங்கி மற்றும் கறுப்பு பட்டி
அணிந்து தன்னை ஒரு கத்தோலிக்க குருவாக காண்பித்து தனியார் வீடுகளுக்கு சென்று நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்
இவர் முத்தரிப்புத்துறை வங்காலை போன்ற இடங்களில் நிதி சேகரிப்பில்
ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது குறித்த நபர் நிதி சேகரிப்பில் ஈடுபடும் ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு கத்தோலிக்க பிரிவுகளை சார்ந்தவராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது
குறித்த நபர் சேகரித்த பணத்தை நானாட்டான் பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் வைப்பிலிட்டுள்ளார்.
இந்த போலிப் பிதிரியார் மீது சந்தேகம் கொண்ட சிலர் மன்னார் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நானாட்டானில் இருந்து மன்னார் நகருக்கு பேருந்தில் சென்ற வேளையில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் வைத்து பொலிசார் இவரைக் கைதுசெய்தனர்.
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த பொலிசார் இவர் உண்மையான குருவானவர் இல்லை
என்பதையும் உறுதிப்படுத்தி குறித்த நபரை அன்றைய 27 தினம் விளக்கமறியலில் வைத்த பொலிசார் மறுநாள் மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
மேலும் ஏழு நாட்கள் இவரை தடுத்து வைக்கும்படி நீதி மன்றக் கட்டளையிட்டதற்கு இணங்க தற்போது இவர் சிறையில் உள்ளதாக தெரிய வருகிறது
இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாய் இருக்கும்படி பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments