மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை-பல்வேறு கிராமங்களை வெள்ள நீரில் மூழ்கியது.
மன்னார்: மன்னார் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் இடைவிடாத கனமழை காரணமாக மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளும் வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளன. மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளதால், தாழ்நிலப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ் வியூகம்,மன்னார் ,செய்தியாளர்
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கே. திலீபன் வழங்கிய தற்போதைய நிலவரங்கள் பின்வருமாறு:
மல்வத்து ஓயா மற்றும் குளங்களின் நிலை
தொடர் மழையினால் ஆறுகள் மற்றும் குளங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளது.
அபாய நீர்மட்டம்: மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் தற்போது 16.9 அடியாக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் மடு, நானாட்டான் மற்றும் முசலி பிரதேச மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.
குளங்கள்: மாவட்டத்தில் உள்ள பிரதான குளங்கள் அனைத்தும் வான் பாயும் நிலையை எட்டியுள்ளன.
.jpeg)
கடல் நீர் உட்புகுந்த கிராமங்கள்
கடும் காற்றுடன் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால், மாந்தை மேற்கு பிரதேசத்தின் கரையோரக் கிராமங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகள்: விடத்தல்தீவு, தேவன்பிட்டி, அந்தோனியார்புரம் ஆகிய கிராமங்கள் கடல் நீரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் கிராம அலுவலர்கள் ஊடாகத் துரித மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மன்னார் பாலத்தில் போக்குவரத்துத் தடை
மன்னார் பிரதான பாலத்தின் மீது வெள்ள நீர் பாய்வதால், பாதுகாப்பு கருதி இராணுவத்தினர் அங்கு விசேட காவலில் ஈடுபட்டுள்ளனர். அவசியத் தேவையின்றி நகருக்குள் நுழைய முற்படுபவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
கள்ள உறவு வைத்துக் கொள்வதற்கு காரணங்கள் என்ன ?
மீனவர்களின் வாழ்வாதாரப் பாதிப்பு
கரை ஓரம் நங்கூரமிடப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள் கடும் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு வேறு இடங்களில் கரை ஒதுங்கியுள்ளன. இதனால் மீனவர்களின் படகுகள் மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்துள்ளதாக மீனவ சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.
முப்படையினரின் மீட்பு நடவடிக்கை
வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ள கிராமங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்டச் செயலகத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
@tamilviyugam

COMMENTS