சைக்கிள் அல்லது துவிச்சக்கரவண்டிகள் இன்றைய நவீன பொருளாதார உலகில் தமிழர்கள் ஒவ்வொருவர் வாழ்விலிருந்து மறைந்து போயிருந்தாலும் கிட்டத்தட்ட15 வர...
சைக்கிள் அல்லது துவிச்சக்கரவண்டிகள் இன்றைய நவீன பொருளாதார உலகில் தமிழர்கள் ஒவ்வொருவர் வாழ்விலிருந்து மறைந்து போயிருந்தாலும் கிட்டத்தட்ட15 வருடங்களுக்கு முன் நமது அப்பாவை போலவே அந்த குடும்பத்தின் ஒரு சுமைதாங்கி
அந்த சைக்கிள்களை அவ்வளவு எளிதாக நாம் மறந்துவிட முடியாது அது இரும்பால் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஏதோ ஒரு உயிருள்ள ஜீவனைப் போல் ஒவ்வொரு தலைமுறையினரோடும் அது தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்
பெரும்பாலானவர்களிடம் இன்று சைக்கிள் இருந்தாலும் அதை தொடுவதும் ஓடிப் பார்ப்பது கூட இல்லை நமது கடந்த கால வாழ்வையும் அப்பாவின் சைக்கிளையும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள் அது இரும்பு அல்ல உயிருள்ள ஒரு இதயம் என்பது புரியும்
இலங்கையின் தமிழர் பகுதிகளில் சைக்கிள்கள் வெறும் போக்குவரத்துச் சாதனங்கள் மட்டுமல்ல அவை குடும்ப உறவுகளின் பின்னிப் பிணைந்த நினைவுகளையும் அன்பையும் கடின உழைப்பையும் சுமந்து நின்று ஒவ்வோர் உடைந்த சங்கிலிக்கும் பஞ்சரான டயருக்கும் பின்னால் ஒரு கதை இருக்கும்.
காலை எழுந்ததும் அப்பா சைக்கிளை எடுத்துக்கொண்டு வயல்வெளிக்கோ சந்தைக்கோ வேலைக்கோ செல்வார். அது அன்றாட வாழ்க்கையின் உணவுத் தேடலுக்கான பயணமாக இருக்கும்
பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல, அம்மா கடைக்குச் செல்ல, அல்லது நீண்ட தூரப் பயணங்கள் திருமண வீடுகளுக்கும் துக்க வீடுகளுக்கும் சைக்கிள்களில் சென்று வந்து நலம் விசாரிக்க – சைக்கிள் எப்போதும் தயாராக இருக்கும்.
சைக்கிள்கள் இல்லாத வீடுகளில் அக்கம் பக்கத்தினரிடம் இரவல் வாங்கிச் செல்வது தேவையை பொருத்து பல கிலோ மீட்டர் துரங்கள் சென்று நமது தேவைகளை பூர்த்தி செய்து தரும் நிகழ்வுகள் அழகானவை
சிறுவர்களும் சிறுமிகளும் முதன்முதலாக சைக்கி ஓட்டப் பழகும் போது விழுந்து காயங்கள் ஏறபடுவது சண்டை சச்சரவுகளுக்குப் பிறகு ஒரு சைக்கிளில் இருவர் சேர்ந்து திரும்பி வருவது உறவுகள் மீண்டும் ஒட்டி உறவாடியதற்கான ஒரு மென்மையான அடையாளம்.
பாடசாலை மாணவ மாணவியர்கள் தங்கள் பாடசாலைகளுக்குச் செல்வதற்கு சைக்கிளை சந்தைகள் மருத்துவமனைகள் வங்கிகள் போன்ற பொது இடங்களுக்குச் செல்ல சைக்கிளே பிரதான போக்குவரத்துச் சாதனமாக இருந்தது.
வீட்டிற்குத் தேவையான உணவுப் பொருட்கள் மரக்கறிகள் போன்றவற்றைச் சந்தையில் இருந்து வாங்கி வர உர வகைகள் நெல்மூடைகள் சுமந்து செல்ல சைக்கிள் பயன்படுத்தப்பட்டது.
சிறிய அளவிலான மருத்துவ அவசரங்களுக்கு நோயாளியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அல்லது மருந்து வாங்க இளைஞர்கள் மாலை நேரங்களில் அல்லது விடுமுறை நாட்களில் சைக்கிளில் உலாவி பொழுதை போக்க இது மட்டுமல்ல சைக்கிளின் பயன்பாடு என்பது பனை மரத்தின் பயன்பாடு போலவே எண்ணிலடங்காது
யுத்த காலப் பகுதியிலும் அதற்குப் பின்னரும் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக சைக்கிளின் பயன்பாடு மேலும் அதிகரித்தது.
பல கிராமப்புறச் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால் மோட்டார் வாகனங்களுக்குச் சிரமமான இடங்களில் கூட சைக்கிள் இலகுவாகச் செல்ல முடிந்தது.
பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு பொருளாதார ரீதியாகவும் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்ததாலும் சைக்கிள் இலங்கைத் தமிழர்களின் அன்றாட வாழ்வில் ஒரு அத்தியாவசிய பகுதியாக இருந்தது.
இலங்கை தமிழர் வாழ்வியலில் சைக்கிள் என்பது ஒரு குடும்பத்தின் வரலாறு அதன் வளர்ச்சியின் மைல்கல் மற்றும் அழியாத நினைவுகளின் கருவறை.
இலங்கையில் Hercules, BSA, Raleigh, Hero, சைக்கிள்கள் பயன்பாட்டில் இருந்து 2010 களில் பொருளாதார வளர்ச்சி மற்றும் மோட்டார் வாகனங்களின் (மோட்டார் சைக்கிள்கள் கார்கள்) பாவனைகளும் மக்களின் போக்குவரத்து தேவைகளும் அதிகரிக்கவே வசதிக்காகவும் சமூக அந்தஸ்துக்காகவும் மோட்டார் வாகனங்களை நாடத் தொடங்கினர்.
அதிகமாக ஏன் நமது நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் கூட சைக்கிளில் தங்களது கனவுகளை தேடிச் சென்று இன்று உயர்ந்த இலக்கை அடைந்திருக்கிறார்கள்
ஒவ்வாரு மாட்ட அரசாங்க அதிபர்களும் பிரதேச செயலாளர்களும் அவர்களது ஆரம்ப அரச உத்தியோகங்களை சைக்கிளில் அலுவலகங்களுக்குச் சென்றே செய்து வந்தவர்கள் தான்
மனிதர்களுக்கு மட்டுமல்ல இலங்கைத் தமிழர்களின் வளவுகளின் ஓரத்தில் துருப்பிடித்து கிடக்கும் சைக்கிள்கள் ஒவ்வொன்று ஆயிரம் கதைகள் சொல்லும் இப்பொழுது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் இந்த சைக்கிள் பாவனை இன்னும் சில வருடங்களில் அறவே இல்லாமலும் போகலாம்


No comments