Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் மாவட்டத்தில் உள்ள கனிம வளங்கள் அதன் பயன்கள் பாதிப்புகள் முழு விபரங்கள்

இலங்கை மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் இல்மனைட், ரூட்டைல், சிர்கோன் டைட்டானியம், மொனோசைட், தோரியம் (Thorium), கார்னட், மேக்னடைட் (Mag...

இலங்கை மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் இல்மனைட், ரூட்டைல், சிர்கோன் டைட்டானியம், மொனோசைட், தோரியம் (Thorium), கார்னட், மேக்னடைட் (Magnetite), போன்ற பெறுமதியும், சக்தியும், மிக்க கனிய மணல் காணப்படுகிறது.

இல்மனைட் (Ilmenite) மற்றும் கனிய மணல் இது இரும்பு மற்றும் டைட்டேனியம் ஒக்சைடுகளைக் கொண்ட ஒரு கனியமாகும். மன்னார்  கரையோரப் பகுதிகளில் இந்த மணல் படிவுகள் காணப்படுகின்றன. 

இதை அகழ்ந்து செல்வதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போடுகின்றது  மன்னார் மாவட்டத்தில் என்னென்ன கனிய வளங்கள் இருக்கிறது  அதன் செயற்பாடுகள், பயன்கள், பாதிப்புகள், என்ன என்பதை புரிந்து கொண்டால் வியப்பும், ஆச்சரியமுமாக, இருக்கம் 

மிகப் பழங்காலம் தொட்டு இந்த மன்னார் மாவட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது இதற்கு  பழமையான  காவியமாக இருக்கும் கம்பராமாயணம் ஒரு சன்று.   இயற்கை அழிவுகள் எவ்வளவு சந்தித்திருந்தாலும்  இன்றும் இந்த மன்னார் மாவட்டத்தை  அழிவிலிருந்து காத்து நிற்பது  இங்கு காணப்படும் பல வகையான கனிம வளங்கள் என்றால் உங்களால் நம் முடியுமா?  இது தொடர்பாக விரிவாக பார்ப்போம் வாருங்கள்  

குறிப்பாக, தலைமன்னார், பேசாலை, தள்ளாடி வடகடல் தென்கடல் போன்ற கரையோரங்களில் இந்த கனிய மணல் அதிகமாக காணப்படுகிறது  

மேலும்  சீமெந்து உற்பத்தியின் பிரதான மூலப்பொருளான சுண்ணாம்புக்கல் மன்னாரில் அதிகளவில் உள்ளது.பிரதேசம்: விடத்தல்தீவு, கட்டுக்கரை, சிலாபத்துறை, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய சுண்ணாம்புக்கல் படிவுகள் காணப்படுகின்றன. செங்கல் உற்பத்தி மற்றும் மட்பாண்டத் தொழிலுக்குத் தேவையான களிமண் வளம்,  அருவி ஆறு பாயும் பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் தாழ்நிலப் பிரதேசங்களில் காணப்படுகின்றன.

இல்மனைட் (Ilmenite)

இல்மனைட் என்பது டைட்டானியம் மற்றும் இரும்பின் ஒக்சைடு (FeTiO₃) ஆகும். இது டைட்டானியத்தின் மிக முக்கியமான மற்றும் முதன்மையான தாதுப் பொருளாகும். இது கருப்பு அல்லது அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும்.

இதன்  பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகள்:

இல்மனைட்டின் 90 சதவீதத்திற்கும்  அதிகமான பயன்பாடு, டைட்டானியம் டை  ஒக்சைட் என்ற வெண்மை நிறமியைத் தயாரிப்பதாகும்.

இதனுடைய தயாரிப்புகள்:

பெயிண்ட்களுக்கு அடர்த்தியான வெண்மை நிறத்தையும், பிரகாசத்தையும், நீண்ட நாள் உழைக்கும் தன்மையையும், கொடுக்கிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு வெண்மை நிறம் மற்றும் புற ஊதாக் கதிர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. காகிதத்தை பிரகாசமாகவும், ஒளி புகாத்தன்மையுடனும் மாற்றுகிறது.

அழகுசாதனப் பொருட்கள்: சன்ஸ்கிரீன் லோஷன்களில் புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் ஒரு முக்கியப் பொருளாகப் பயன்படுகிறது. மேலும், பற்பசை, சோப்பு போன்றவற்றிலும் இதனுடைய பயன்படு உள்ளது

டைட்டானியம் உலோகம் (Titanium Metal) தயாரிப்பு:

இதன் வலிமை, குறைந்த எடை மற்றும் அரிமானத்தைத் தடுக்கும் தன்மை காரணமாக இது ஒரு உயர் சிறப்பு உலோகம் ஆகும் இதன் மூலம் விமானத்தின் கட்டமைப்பு, இன்ஜின் பாகங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது 

மருத்துவ உள்வைப்புகள் (Medical Implants): மனித உடலுடன் எளிதில் ஒத்துப்போகும் என்பதால், எலும்பு முறிவுகளுக்குப் பயன்படும் பிளேட்டுகள், திருகுகள், பல் உள்வைப்புகள் டென்னிஸ் ராக்கெட்டுகள், கோல்ஃப் கிளப்கள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது.

ரூட்டைல் (Rutile)

ரூட்டைல் என்பதும் டைட்டானியம் டை  ஒக்சைடின் (TiO₂) ஒரு வடிவமாகும். இது இல்மனைட்டை விட அதிக அளவில் டைட்டானியத்தைக் கொண்டுள்ளது. இது பொதுவாக செம்பழுப்பு நிறத்தில் காணப்படும்.

பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகள்:

 ரூட்டைல் நேரடியாகவே வெண்மை நிறமி தயாரிக்கப் பயன்படுகிறது. இதன் தரம் அதிகமாக இருப்பதால், உயர் தர டைட்டானியம் டை ஆக்சைடு தயாரிப்பு, உயர்ரக பெயிண்ட் மற்றும் பிளாஸ்டிக்  வெல்டிங் செய்யும்போது, மின்சார வில் (Electric Arc) நிலையாக இருக்கவும், வெல்டிங் செய்யப்படும் பகுதியை ஒட்சிஜனேற்றத்திலிருந்து பாதுகாக்கவும் வெல்டிங் கம்பிகளின் மீது பூச்சாக அமைப்பதற்கு  (Flux) ரூட்டைல் பயன்படுத்தப்படுகிறது.

சிர்கான் (Zircon)


சிர்கான் என்பது சிர்கோனியம் சிலிக்கேட் (ZrSiO₄) ஆகும். இது மிகவும் கடினமான மற்றும் உயர் வெப்பநிலையைத் தாங்கக்கூடிய ஒரு கனிமமாகும் 

பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகள்:

பீங்கான் தொழில் (Ceramics Industry): பீங்கான் பொருட்களுக்கு வெண்மை நிறத்தையும், ஒளிபுகாத் தன்மையையும் (Opacity) கொடுக்கிறது.தரை மற்றும் சுவர் டைல்ஸ் (Tiles), கோப்பைகள், தட்டுகள், வாஷ் பேசின் போன்ற சுகாதாரப் பாத்திரங்கள் (Sanitaryware). உயர்வெப்பம் தாங்கும் பொருட்கள் (Refractories) தயாரிக்கவும் இதன் உயர் உருகுநிலை காரணமாக, அதிக வெப்பம் உள்ள உலைகளில் எஃகு, கண்ணாடி மற்றும் சிமெண்ட் ஆலைகளில் உள்ள உலைகளின் உட்புறச் சுவர்கள் (Furnace Linings) மற்றும் செங்கல்கள். தயாரிக்க பயன்படுகிறது 

சிர்கோனியம் உலோகம் மற்றும் அதன் கலவைகள்:

சிர்கான் அல்லது சிர்கோனியம் என்ற உலோகத்தை பிரித்தெடுக்க பயன்படுகிறது.

அணு உலைகள் (Nuclear Reactors): அணு உலைகளில் நியூட்ரான்களை உறிஞ்சாத தன்மை கொண்டதால், எரிபொருள் தண்டுகளைச் சுற்றிப் பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தப்படுகிறது.

கெமிக்கல் பைப்லைன்கள்: அரிமானத்தை எதிர்க்கும் என்பதால், ரசாயனத் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.

ரத்தினக்கல்  நிறமற்ற சிர்கான், வைரத்திற்கு மாற்றாக நகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

மொனோசைட் (Monazite)


மொனோசைட் என்பது ஒரு பாஸ்பேட் கனிமமாகும். இது அரிய பூமி தனிமங்கள் (Rare Earth Elements - REEs) மற்றும் தோரியம் (Thorium) ஆகியவற்றின் முக்கிய மூலக் கூறாகும் இது வளர்முக நாடுகளின் அணுசக்தி திட்டத்திற்கு மிக முக்கியமான கனிமமாகும்.

இதன் பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகள்:

அரிய பூமி தனிமங்கள் (REEs): சீரியம் (Cerium), லந்தனம் (Lanthanum), நியோடைமியம் (Neodymium) போன்ற தனிமங்கள் இதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன இது மின்னணுவியல் (Electronics): மொபைல் போன்கள், கணினிகள், டிவி திரைகள். சக்திவாய்ந்த காந்தங்கள்: மின்சார கார்கள், காற்றாலைகள், ஹெட்ஃபோன்களில் பயன்படுத்தப்படும் நிரந்தர காந்தங்கள், வினையூக்கிகள் (Catalysts): பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளில் வினையூக்கிகளாகப் பயன்படுகின்றன மேலும் கண்ணாடிகளை மெருகூட்டப் பயன்படும் பவுடர்களும் தயாரிக்கப்படுகின்றன. 

தோரியம் (Thorium):

இது ஒரு அணுசக்தி எரிபொருளாகும். எதிர்காலத்தில் யுரேனியத்திற்கு மாற்றாக அணு உலைகளில் இந்த தோரியம் (Thorium) பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. 

கார்னட் (Garnet)

கார்னட் என்பது சிலிக்கேட் கனிமங்களின் ஒரு குழுவாகும். இது மிகவும் கடினத்தன்மை (Hardness) கொண்டது. இதன் முக்கிய பயன்பாடு உராய்வுப் பொருளாக (Abrasive) இருப்பதாகும்.

இதன்  பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகள்:

நீர் பீய்ச்சி வெட்டுதல் (Waterjet Cutting): மிக அதிக அழுத்தத்தில் வரும் நீருடன் கார்னட் துகள்களைக் கலந்து, எஃகு, கிரானைட் போன்ற கடினமான பொருட்களைத் துல்லியமாக வெட்டப் பயன்படுகிறது.

மணல் வீச்சு (Sandblasting) கப்பல்கள், உலோகப் பரப்புகள் ஆகியவற்றில் உள்ள துரு, பெயிண்ட் போன்றவற்றை அகற்றவும், பரப்பைச் சுத்தம் செய்யவும் பயன்படுகிறது உராய்வுத் தாள்கள் (Sandpaper)  மரம் மற்றும் உலோகப் பரப்புகளைத் தேய்த்து மெருகேற்றப் பயன்படும் சாண்ட் பேப்பர்கள் தயாரிக்கப் பயன்படுகிறது  குடிநீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் ஆலைகளில், வடிகட்டும் அடுக்கில் ஒரு ஊடகமாகப் பயன்படுகிறது

சிலிமனைட் (Sillimanite)

சிலிமனைட் என்பது ஒரு அலுமினோ-சிலிக்கேட் கனிமமாகும். இதன் முக்கிய பண்பு, மிக அதிக வெப்பநிலையைத் தாங்கும் திறன் (High Refractoriness) திறன் கொண்டவை  இதன் உயர் வெப்பம் மற்றும் ரசாயன அரிப்பைத் தாங்கும் தன்மை காரணமாக, உலைகள் கட்டப் பயன்படுகிறது. மேலும் எஃகு, சிமெண்ட், கண்ணாடி, பீங்கான் மற்றும் பெட்ரோகெமிக்கல் ஆலைகளில் உள்ள உலைகளுக்கான உயர்வெப்பம் தாங்கும் செங்கல்கள் மற்றும் சிமெண்ட் கலவைகள் உயர்ரக பீங்கான் பொருட்கள் மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்கும் கண்ணாடிகள் தயாரிப்பில் பயன்படுகிறது

மேக்னடைட் (Magnetite)

மேக்னடைட் என்பது ஒரு இரும்பு ஒக்சைட் (Fe₃O₄) ஆகும். இது மிகவும் வலுவான காந்தத்தன்மை கொண்ட ஒரு கனிமமாகும்.  இதன் முக்கியப் பயன்பாடு இரும்பு மற்றும் எஃகு தயாரிப்பதாகும். உருக்காலைகளில் இது ஒரு முக்கிய மூலப்பொருளாகும் கன ஊடகப் பிரிப்பு (Heavy Media Separation): நிலக்கரி போன்ற தாதுக்களைச் சுத்தம் செய்ய, கனமான திரவங்களை உருவாக்க இது பயன்படுகிறது காந்தப் பொருட்கள், வண்ணப்பூச்சுகள், மற்றும் நீர் சுத்திகரிப்பில் பயன்படுகிறது.

டைட்டானியம் (Titanium) - உலோகம்

டைட்டானியம் என்பது இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்ற கனிமங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு உலோகம். இது இயற்கையில் தனித்துக் கிடைப்பதில்லை  இது  எஃகு போன்ற மிகவும் வலிமையானது 

அரிமானத்தை முற்றிலும் தடுக்கும் தன்மை (Excellent Corrosion Resistance) உயர் வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டவை இவை விண்வெளித்துறை, விமான இன்ஜின்கள், கட்டமைப்பு, விண்வெளி ஓடங்கள்,.

மருத்துவத்தில்  எலும்பு முறிவு, திருகுகள், இடுப்பு மற்றும் முழங்கால் மாற்று மூட்டுகள், பல் உள்வைப்புகள் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், கண்ணாடிக் சட்டகங்கள், நகைகள் ரசாயனத் தொழில் அமிலங்கள் போன்ற அரிக்கும் ரசாயனங்களைக் கையாளும் கலன்கள் மற்றும் குழாய்கள் தயாரிப்பில் பயன்படுகிறது 

இவை அனைத்தும்  "கனரக கனிம மணல்" (Heavy Mineral Sands) வகையைச் சேர்ந்தவை இந்தக் கனிம வளங்கள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாத முக்கிய  நாடுகளும் உள்ளன அவையாவன  ஜப்பான் (Japan):

தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், ஜப்பானில் இயற்கை வளங்கள், குறிப்பாக கனிம வளங்கள் மிகவும் குறைவு. டைட்டானியம் உட்பட தனது தேவைக்கான அனைத்து கனிமங்களையும் அது இறக்குமதி செய்கிறது.

தென் கொரியா (South Korea):

ஜப்பானைப் போலவே, தென் கொரியாவும் ஒரு தொழில்மயமான நாடு. ஆனால், பெரிய அளவிலான கனிம வளங்கள் இல்லாததால், மூலப்பொருட்களுக்காக மற்ற நாடுகளையே சார்ந்துள்ளது.

சிங்கப்பூர் (Singapore):

இது ஒரு சிறிய நகர-அரசு (City-State). இங்கு சுரங்கத் தொழிலுக்கான புவியியல் அமைப்போ, பெரிய கனிம வைப்புகளோ இல்லை.

 பல ஐரோப்பிய நாடுகள் (Many European Countries):ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள் தொழில்மயமானவை. ஆனால், கனரக கனிம மணல் வளங்களில் அவை தன்னிறைவு பெற்றவை அல்ல. தங்களின் தேவைகளுக்கு இறக்குமதியையே பெரிதும் நம்பியுள்ளன.

வளைகுடா நாடுகள் (Gulf Countries):சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), கத்தார் போன்ற நாடுகள் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவில் உலகின் பணக்கார நாடுகள். ஆனால், அவற்றின் புவியியல் அமைப்பு கனரக கனிம மணல் உருவாவதற்கு ஏற்றதாக இல்லை. எனவே, இந்தக் கனிமங்கள் அங்கு மிக அரிதாகவே காணப்படுகின்றன.

ஆனால்  மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் காணப்படும் கனிய வளங்கள்  டைட்டானியம், இல்மனைட், ரூட்டைல், சேரகோன் (சிர்கோன்), மக்னடிக், மொனோசைட், கார்னட், சிலிமனைட் போன்றவை கனரக கனிம மணல் (Heavy Mineral Sands)  மணலில் செறிந்து காணப்படுகின்றன 

இன்று மன்னார் மாவட்டத்தில் இந்த கனிய மணல் வளங்களை அகழ்ந்து செல்ல துடித்துக் கொண்டிருக்கும்  பன்னாட்டு நிறுவனங்கள் மேற் கூறப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிக்கவே 

இந்த மண் அகழ்வு முறையானது  கனிமங்களின் செறிவு மற்றும் பொருளாதார சாத்தியக்கூறுகளைப் பொறுத்து, 5 மீட்டர் முதல் 15 மீட்டர் (சுமார் 15 அடி முதல் 50 அடி) ஆழம் வரை மணல் அள்ளப்படும். சில இடங்களில் இந்த ஆழம் சற்று அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். கனிமங்கள் நிறைந்த மணல் பகுதி முழுவதும் இயந்திரங்கள் மூலம் தோண்டி எடுக்கப்பட்டு, பிரித்தெடுக்கும் ஆலைக்கு அனுப்பப்படும்.

இதனால் அந்தப் பிரதேசத்திற்கும் மக்களுக்கும் உண்டாகும் பாதிப்புகள் (Impacts on the Region and People)

கனிமணல் அகழ்வு என்பது ஒரு பிரதேசத்தின் சுற்றுச்சூழலையும், சமூகப் பொருளாதார, கட்டமைப்பையும், மிக மோசமாகப் பாதிக்கக்கூடிய ஒரு செயலாகும். அதன் முக்கிய பாதிப்புகள் பின்வருமாறு:

சுற்றுச்சூழல் பாதிப்புகள் (Environmental Impacts) கடல் அரிப்பு (Coastal Erosion)கடற்கரையின் பாதுகாப்பு அரணாக விளங்கும் மணல் மேடுகளை அகற்றுவதால், கடல் அலைகளின் வேகம் நேரடியாக நிலப்பகுதியைத் தாக்கும். இது தீவிரமான கடல் அரிப்புக்கு வழிவகுத்து, கரையோர கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாயத்தை உருவாக்கும்.

நிலத்தடி நீர் பாதிப்பு (Groundwater Contamination): உவர் நீர் ஊடுருவல் (Saltwater Intrusion) ஆழமாக மணல் தோண்டப்படுவதால், நிலத்தடி நன்னீர் மட்டம் குறைந்து, கடல் நீர் எளிதாக நிலத்தடி நீருடன் கலந்துவிடும். இதனால் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் உவர்ப்பாகி, பயன்படுத்த முடியாததாகிவிடும்.

நீர் மட்டம் குறைதல்: பெரிய அளவில் நிலம் தோண்டப்படுவதால், மழைநீர் சேமிக்கப்படாமல், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துவிடும்.

பல்லுயிர் பெருக்கத்திற்குச் சேதம் (Loss of Biodiversity):

மன்னாரின் கரையோரப் பகுதிகள் பனை மரங்கள், சதுப்பு நிலங்கள் (Mangroves), ஈரநிலங்கள் (Wetlands) போன்ற பலவீனமான சூழல் அமைப்புகளைக் கொண்டவை. அகழ்வுப் பணிகள் இந்தச் சூழல் அமைப்புகளை முழுமையாக அழித்துவிடும் கடல் ஆமைகள் முட்டையிடும் இடங்கள், பறவைகளின் வசிப்பிடங்கள் போன்றவை அழிக்கப்பட்டு, பல்லுயிர் பெருக்கம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

கதிரியக்க அபாயம் (Radiation Risk):  மொனோசைட் (Monazite) கனிமத்தில் தோரியம் (Thorium) என்ற கதிரியக்கத் தனிமம் உள்ளது. அகழ்வின் போது இதன் துகள்கள் காற்றில் கலந்து, நீர் மற்றும் மண்ணில் படிந்து கதிரியக்க மாசுபாட்டை ஏற்படுத்தும். இது நீண்ட காலத்திற்குப் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை உருவாக்கும் அபாயம் கொண்டது.

சமூக மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் (Socio-economic Impacts)

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு (Impact on Fishermen's Livelihoods): கடற்கரைச் சூழல் மாறுவதால், மீன்களின் இனப்பெருக்க இடங்கள் அழியும். கடல் நீர் கலங்கலாவதால் மீன்வளம் குறையும். மேலும், அகழ்வுப் பகுதிகளுக்குள் மீனவர்கள் செல்லத் தடை விதிக்கப்படலாம். இது பாரம்பரியமாக மீன்பிடித்தலை நம்பியுள்ள சமூகங்களின் வாழ்வாதாரத்தை முழுமையாகச் சிதைத்துவிடும்.

இடப்பெயர்வு (Displacement of People): அகழ்வுப் பணிகளுக்காக மக்கள் தங்களது பூர்வீக நிலங்கள், வீடுகள் மற்றும் கிராமங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள். இது பெரும் சமூகப் பதற்றத்தையும், கலாச்சார அழிவையும் ஏற்படுத்தும்.

உள்கட்டமைப்புச் சேதம் (Infrastructure Damage): கனரக வாகனங்களின் தொடர்ச்சியான பயன்பாட்டினால், கிராமப்புறச் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடையும்.

சமூக முரண்பாடுகள் (Social Conflicts): வேலைவாய்ப்பு போன்ற சில வாக்குறுதிகளை நம்பி ஒரு சிலரும், வாழ்வாதாரம் மற்றும் சூழல் பாதிப்புகளை எண்ணிப் பெரும்பான்மையான மக்களும் எதிர்க்கும் போது, சமூகத்திற்குள் பிளவுகளும் முரண்பாடுகளும் உருவாகும்.

சுகாதாரப் பாதிப்புகள் (Health Impacts)

சுவாச நோய்கள் (Respiratory Diseases): அகழ்வின் போது உருவாகும் நுண்ணிய மணல் துகள்கள் (Silica dust) காற்றில் கலந்து, அதனைச் சுவாசிக்கும் மக்களுக்கு சிலிக்கோசிஸ் (Silicosis) போன்ற குணப்படுத்த முடியாத நுரையீரல் நோய்களை ஏற்படுத்தும்.

கதிரியக்கத்தால் ஏற்படும் நோய்கள்: மொனோசைட் போன்ற கனிமங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கம், நீண்ட கால அடிப்படையில் புற்றுநோய், பிறவிக் குறைபாடுகள் மற்றும் மரபணு சார்ந்த நோய்களை ஏற்படுத்தும்.

மாசுபட்ட நீரால் ஏற்படும் நோய்கள்: உவர் நீர் மற்றும் கன உலோகங்கள் கலந்த நீரைப் பருகுவதால், சிறுநீரக நோய்கள், தோல் வியாதிகள் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படும்.

மன்னார் போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த, போரினால் பாதிக்கப்பட்டு மெல்ல மீண்டு வரும் ஒரு பிரதேசத்தில், கனிய மணல் அகழ்வு என்பது குறுகிய காலப் பொருளாதார இலாபங்களுக்காக, அந்தப் பிரதேசத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் ஒரு செயலாகும். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட, அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல், சமூக மற்றும் சுகாதார இழப்புகள் பன்மடங்கு அதிகமாகவும், சரிசெய்ய முடியாதவையாகவும் இருக்கும். 

கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மன்னார் மாவட்டம் இயற்கை துறைமும்  பன்னாட்டு வணிகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலமாக இருந்துள்ளது  அவ்வாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலமாக இருந்தமைக்கு அதனுடைய கடல் பரப்புகள் மட்டும் காரணம் அல்ல.  இங்கு  குறிப்பிடப்ப்ட்ட கனிம வளங்களும் ஒரு காரணமே.  தொழிநுட்ப ரீதியில் வளர்ந்து விட்ட எத்தனையோ நாடுகளில் இவ்வாறான கனிய வளங்கள் இல்லை  அவை இறக்குமதி செய்கின்றன ஆகவே வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும் உலக நாடுகள் இந்த மன்னார் மாவட்டத்தின் வளங்களை சுரண்டி தங்களது நாடுளை வளப்படுத்திக் கொண்டது  இன்று தெரிய வந்துள்ள உண்மை

மெதுமெதுவான கடலரிப்பு அதிகூடிய வெப்பநிலை வறட்சி  தாழ்நிலம்  போன்ற அழிவின் விளிம்பில் இருக்கும்  மன்னார் மாவட்டத்தை  நிலத்தடியில் இருக்கும் இந்த கனிம வளங்கள்தான் இன்றும் பாதுகாத்து வைத்துள்ளது அதற்கு இந்த கனிம வளங்களின் செயற்பாடுகள் பறைசாற்றி நிற்கின்றது ஆகவே இந்த மன்னார் மாவட்டத்தை கனிம வள அகழ்விலிருந்தும் அழிவிலிருந்தும் பாதுகாப்பது  ஒவ்வொரு மன்னார்  மண்ணில் பிறந்த குடிமகனின் கடமையாகும் 

No comments