மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு உட்பட்ட பல்வேறு உணவகங்கள்,சிற்று டிசாலைகள்,வீதி உணவகங்கள் மீது மன்னார் பொது சுகாதார பரிசோதக...
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு உட்பட்ட பல்வேறு உணவகங்கள்,சிற்று டிசாலைகள்,வீதி உணவகங்கள் மீது மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக பண்டிகை காலம் என்பதன் அடிப்படையில் அதிகளவான சுகாதாரமற்ற உணவுகள் மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக குறித்த ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
மன்னார் நகரசபை பகுதியில் பண்டிகை கால நடைபாதை வியாபார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டி மற்றும் ஐஸ்கிரீம் விற்பனை நிலையங்கள் மீதும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் .
மன்னார் நகர் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் உணவுகளை தயாரித்து அசுத்தமாக உணவு தயாரிக்கும் பகுதியை வைத்திருந்ததோடு சூடான உணவுகளை சுகாதார விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் வாளியில் களஞ்சியப்படுத்தி இருந்த உணவகம் ஒன்றின் மீது சுகாதார துறை சட்ட நடவடிக்கை மேற்கோண்டுள்ளதோடு குறித்த உணவுகளையும் பயன்படுத்த முடியாத வகையில் அழித்துள்ளனர்.
மேலும் பண்டிகைக்கால தெரு ஓர உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விற்பனை நிலையங்களில் உணவுகளை வேண்டி உட்கொள்வோர் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார துறையினர் மக்களிடம் வேண்டு கொள் விடுத்துள்ளனர்.


No comments