ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய சென்ற கேரள பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

சம்பவம் நடந்தது எப்படி?
தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், இன்று (22) காலை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்வதற்காகத் தெற்கு கோபுர வாசல் வழியாகக் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அந்தச் சாலையில் எதிர்பாராத விதமாக அதிவேகமாக ஓடிவந்த மாடு ஒன்று, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சீசா (62) என்ற பெண்மணி மீது பலமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மன்னாரில் 21 வயதுடைய இளம் குடும்ப பெண்ணை காணவில்லை-மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.
மருத்துவமனையில் அனுமதி
காயமடைந்த சீசாவை அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு, உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், தலையில் ஏற்பட்ட காயத்திற்காக எட்டு தையல்கள் போடப்பட்டன. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
வயதான பெண்மணியை மாடு முட்டித் தள்ளிய இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள், அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருவதுடன், கோயில் வீதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
@tamilviyugam

COMMENTS