மன்னார் (சிறப்பு நிருபர் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, மன்னார் பரிகாரி கண்டல் பேருந்து நிலையத்தில் விசேட சிறுவர் பாதுகாப்பு விழி...
மன்னார் (சிறப்பு நிருபர்
சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, மன்னார் பரிகாரி கண்டல் பேருந்து நிலையத்தில் விசேட சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை (18) மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஜீவோதய சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் பேரணியானது, சிறுவர் உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பைச் சமூகத்தில் உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.
பாதுகாப்பான எதிர்காலத்திற்கான விழிப்புணர்வு சிறுவர்களுக்குப் பாதுகாப்பான சூழல், தடையற்ற கல்வி, சரியான பராமரிப்பு மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்குவது பெற்றோரின் கடமை மட்டுமல்லாமல், சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பாகும் என்பதை வலியுறுத்தி இப் பேரணி அமைந்தது.
மேலும், சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும், ஒவ்வொரு குழந்தையும் அச்சமின்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டியதன் அவசியத்தைப் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும்.
பல்வேறு தரப்பினரின் பங்களிப்பு இப் பேரணியில் கலந்துகொண்ட சிறுவர்கள், சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை வலியுறுத்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
இவ் விழிப்புணர்வு நிகழ்வில் அரசு உயர் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறுவர்களின் பாதுகாப்புக்கான தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
@tamilviyugam


No comments