Page Nav

HIDE

Breaking News:

latest

தலைமன்னாரில் சோகம் குடும்பத் தகராறில் குடும்பப்பெண் உயிரிழப்பு கணவர் கைது

TAMILVIYUGAM.COM, EDITORAL, சம்பவத்தின் பின்னணி மன்னார் மாவட்டம், தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் இன்று (26-08-2026) புதன்கிழமை காலை 9:30 மணிய...

TAMILVIYUGAM.COM, EDITORAL,

சம்பவத்தின் பின்னணி மன்னார் மாவட்டம், தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் இன்று (26-08-2026) புதன்கிழமை காலை 9:30 மணியளவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் இளம் குடும்பப்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். tamilviyugam தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான கோகுலன் சோனியா (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

வைத்தியசாலையில் அனுமதி மற்றும் உயிரிழப்பு ஸ்ரேசன் பகுதியிலுள்ள வீடொன்றில் கணவனால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்கான குறித்த பெண், கடுமையான காயங்களுடன் உடனடியாக தலைமன்னார் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக திருமண பந்தத்தில் நுழைய இருக்கும் ஆண் பெண்களுக்கு முக்கியமான ஆலோசனைகள்

தற்போது உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் பொலிஸாரால் கைது இத்தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் உயிரிழந்த பெண்ணின் 32 வயதுடைய கணவரை தலைமன்னார் பொலிஸார் ஸ்ரேசன் பகுதியிலேயே வைத்து உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

குடும்பப் பின்னணி மற்றும் பொலிஸாரின் விசாரணை உயிரிழந்த தம்பதியினருக்கு 7 மற்றும் 10 வயதுடைய இரண்டு பிள்ளைகள் உள்ளதாகத் தெரியவருகிறது. கணவன்-மனைவிக்கு tamil viyugam இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருந்த இவர்கள், அண்மையிலேயே மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கியதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து தலைமன்னார் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

@tamilviyugam

No comments