Page Nav

HIDE

Breaking News:

latest

சிறுபோக நெல் கொள்முதல் மற்றும் வட்டியற்ற கடன் திட்டம் தொடர்பில் விசேட கலந்தரையாடல்

மன்னார் விஷேட செய்தியாளர் 21/08/2026 மன்னார் மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடைகளை அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் கொள்முதல் செய்யவும், அரிசி ...

மன்னார் விஷேட செய்தியாளர்
21/08/2026

மன்னார் மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடைகளை அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் கொள்முதல் செய்யவும், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கவுமான விசேட கலந்தரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.

நிதியமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக நடைபெற்ற இக்கூட்டத்தில், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நியாயமான விலையில் கொள்முதல் செய்வதற்கான புதிய சுற்றுநிரூப வழிமுறைகள் மற்றும் கடன் திட்ட நிபந்தனைகள் தெளிவுபடுத்தப்பட்டன.

நெல் கொள்முதல் விலை மற்றும் தரக் கட்டுப்பாடுகள்

சந்தையில் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலைகள்:

  • வெள்ளை நாடு நெல் (1 kg): ரூ. 120

  • சிவப்பு நாடு நெல் (1 kg): ரூ. 120

  • சம்பா நெல் (1 kg): ரூ. 130

தரக் கட்டுப்பாடுகள்:

  • நெல்லின் ஈரப்பதம் அதிகபட்சம் 14% ஆக இருத்தல் வேண்டும்.

  • பதர் நெல்லின் அளவு 9%-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் அளவுகள்

நிலப்பரப்பின் அடிப்படையில் ஒரு விவசாயியிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் அதிகபட்ச நெல்லின் அளவுகள்:

  • 1 ஏக்கர் வரை: அதிகபட்சமாக 1,000 kg

  • 1 - 3 ஏக்கர் வரை: அதிகபட்சமாக 2,500 kg

  • 3 - 5 ஏக்கர் வரை: அதிகபட்சமாக 4,000 kg

வட்டியற்ற கடன் திட்டம் மற்றும் நிபந்தனைகள்

நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 25 மெட்ரிக் தொன் வரை அரைக்கும் திறன் கொண்ட, பதிவு செய்யப்பட்ட அரிசி ஆலைகள் மற்றும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு ரூ. 25 மில்லியன் வரை வட்டியற்ற கடன் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

  • முன்பணம்: ஆரம்ப முன்பணமாக 25% விடுவிக்கப்படும்.

  • மீதித் தொகை: 3 சம தவணைகளில் வழங்கப்படும்.

  • மீளளிப்புக்காலம்: கடனை 240 நாட்களுக்குள் முழுமையாக மீளச் செலுத்த வேண்டும்.

  • தாமதக் கட்டணம்: குறித்த காலத்திற்குள் செலுத்த தவறினால், எஞ்சிய தொகைக்கு ஆண்டிற்கு 10% வட்டி அறவிடப்படுவதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.

  • தகுதி: முந்தைய அரசாங்கக் கடன்களை மீளச் செலுத்தாத ஆலை உரிமையாளர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள்.

தகுதியான அரிசி ஆலை உரிமையாளர்களும் கூட்டுறவுச் சங்கங்களும் உடனடியாக மாவட்ட செயலகத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு இச்செயற்திட்டத்தை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

@tamilviyugam

No comments