தமிழ் வியூகம், கிழக்கு மாகாண செய்தியாளர், 23/08/2026 மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல தீவிர ...
தமிழ் வியூகம், கிழக்கு மாகாண செய்தியாளர்,
23/08/2026
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று (22) ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் என்பவரால் இந்த அதிகாரப்பூர்வ முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா மீது சுமத்தப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள்
பொலிஸில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் படி, ஹிஸ்புல்லா மீது பின்வரும் முக்கிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
காளி கோவில் இடிப்பு: ஓட்டமாவடி பகுதியில் அமைந்திருந்த காளி கோவில் இடிக்கப்பட்ட விவகாரம்.
நீதவான் இடமாற்றம்: நீதவான் ஒருவர் முறையற்ற விதத்தில் இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம்.
சஹ்ரானுடன் தொடர்பு: உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்.
காணி முறைகேடுகள்: ஆயிரக்கணக்கான ஏக்கர் அரச காணிகள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டமை.
இனப் பிளவை ஏற்படுத்தியதாக ஈரோஸ் கட்சி குற்றச்சாட்டு
முறைப்பாட்டைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன், "கடந்த 1990ஆம் ஆண்டு முதல் கிழக்கில் ஹிஸ்புல்லா மேற்கொண்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகள், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே தேவையற்ற பிளவை ஏற்படுத்தியுள்ளன" எனக் குற்றம்சாட்டினார்.
இந்திய வாழ் இலங்கைத் தமிழர்கள் கௌரவமாக நாடு திரும்பப் புதிய பொறிமுறை அவசியம்: பாராளுமன்றத்தில் MP
மேலும், தன் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் எழுத்துமூல ஆதாரங்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
@tamilviyugam

No comments