Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் பேசாலையில் சோகம் பற்றைக்காட்டில் இருந்து இரு பிள்ளைகளின் தந்தையின் உடல் மீட்பு

மன்னார் (சிறப்பு நிருபர்) | 07 ஆகஸ்ட் 2026 மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை பொலிஸ் பிரிவின் பேசாலை 8 ஆம் வட்டாரப் பகுதியில் ...

மன்னார் (சிறப்பு நிருபர்) | 07 ஆகஸ்ட் 2026

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை பொலிஸ் பிரிவின் பேசாலை 8 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து ஆண் ஒருவரின் ச*ட*ல*ம் இன்று வெள்ளிக்கிழமை (07-08-2026) மதியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவல்

குறித்த பற்றைக்காட்டுப் பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த அப்பகுதி மக்கள், உடனடியாக கிராம அலுவலர் ஊடாக பேசாலை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்

பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட நபர் பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த  (வயது 41) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தொழில்முறை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதும், சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து சற்றுத் தொலைவிலேயே இவரது வீடு அமைந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

நேற்று காலை முதல் மாயமான தொலைபேசி தொடர்பு

உயிரிழந்த நபரின் தொலைபேசித் தொடர்பு நேற்று வியாழக்கிழமை (06) காலை 7.30 மணிக்குக்குப் பிறகு கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தடயவியல் பொலிஸார் களத்தில்

சம்பவ இடத்திற்கு வருகை தந்த குற்றத்தடுப்பு தடயவியல் பொலிஸார் (SOCO) தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இந்தச் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் பேசாலை பொலிஸார் மேல் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

@tamilviyugam

No comments