Page Nav

HIDE

Breaking News:

latest

இலங்கையில் பாஸ்போட் (கடவுச்சீட்டு ) ஒரே நாளில் எடுப்பதற்கு நடைமுறைகள் என்ன ?

கொழும்பு, பத்திரமுல்லவில் ஒரே நாளில் பாஸ்போட் பெறுவதற்கான ரோக்கன் காலை ஆறு மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரையும் நாளாந்தம் தற்போது வழங்கப்பட...

கொழும்பு, பத்திரமுல்லவில் ஒரே நாளில் பாஸ்போட் பெறுவதற்கான ரோக்கன் காலை ஆறு மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரையும் நாளாந்தம் தற்போது வழங்கப்படுகின்றது.

ஒரே நாள் சேவைக்கு கட்டணம் 20 000/-சாதாரண சேவைக்கு கட்டணம் 10 000/-சாதாரண சேவையில் பாஸ்போட் கிடைக்க சராசரியாக மூன்று மாதங்கள் செல்கிறது. 

2024.11.06 ஆம் திகதி முதல் கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளின் வசதி கருதி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு புதிய முறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

1. அதற்கமைய, 2024.11.06ஆம் திகதி முதல் இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு http://www.immigration.gov.lk இணைப்பினூடாக முன்கூட்டிய பதிவொன்றை மேற்கொள்ளல் வேண்டும். அன்றைய நாள் முதல் பதிவுசெய்யும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 2024.12.04 ஆம் திகதி புதன் கிழமை முதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது..

2. எனவே, 2024.12.03ஆம் திகதி செய்வாய் கிழமை வரை இதுவரையில் காணப்பட்ட முறைக்கு அமைய நாட்களைப் பெற்றுக்கொண்டுள்ள ஒழுங்குமுறைக்கு அமைய கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது..

3. புதிய கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகள்/ தற்போது கடவுச்சீட்டுக்களைவைத்திருப்பவர்கள்/ காணாமல்போன கடவுச்சீட்டுக்கள் என்பவற்றுக்கு இந்தப் புதிய முறையின் ஊடாக பதிவுசெய்ய முடியும்.

4. முன்கூட்டிய பதிவுமுறை ஒருநாள் மற்றும் சாதாரண சேவை என்ற இரண்டு வகைக்கும் செல்லுபடியாகும்.

5. பதிவுசெய்வதற்காக விண்ணப்பதாரியின் செல்லுபடியான தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் செல்லுபடியான தொலைபேசி இலக்கம் என்பன அவசியமாகும். கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது அந்த தேசிய அடையாள அட்டை இலக்கம் விண்ணப்பதாரியின் வசம் இருத்தல் வேண்டும்.

6. 16 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு பதிவுசெய்யும் போது தாயின் அல்லது தந்தையின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுதல் வேண்டும்.

7. மேலுள்ள தகவல்கபை பூரணப்படுத்தும் தாங்கள் ஏற்புடை அங்கீகரிக்கப்பட்ட புகைப்படசாலை ஒன்றிலிருந்து பெற்றுக்கொண்ட புகைப்பட ரசீதுடன் www.immigration.gov.lk  இணையத்தளத்தில் பிரவேசித்து "கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு பதிவுசெய்தல்” எனும் ஐகன் ஊடாக உள்நுழைந்து ஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் பதிவுசெய்ய முடியும்.

8. தங்களது பதிவு வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்படுமிடத்து விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்காக தங்களுக்கு நாளொன்று SMS குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும். ஏற்புடைய SMS குறுஞ்செய்திக்கு அமைய தாங்கள் தெரிவுசெய்த இடத்திற்கு (பிரதான அலுவலகம், மாத்தறை, கண்டி, குருணாகல் மற்றும் வவுனியா) ஒதுக்கப்பட்டுள்ள நாளில் விண்ணப்பம் மற்றும் ஏற்புடைய அனைத்து ஆவணங்களின் மூலப் பிரதிகள் சகிதம் மு.ப. 12.00 மணிக்கு முன்னர் கட்டாயம் சமூகமளித்தல் வேண்டும். அன்றைய தினம் சமூகமளிக்கத் தவறும் பட்சத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் இழக்கப்படுவதோடு, வேறு நாளொன்றுக்கு மீண்டும் பதிவுசெய்தல் வேண்டும்.

(நேரடியாக செல்பவர்களுக்கு மேற்குறிப்பிடட அறிவுறுத்தல் தேவைப்படாது )

9. நாளொன்றையும் நேரத்தையும் ஒதுக்கி  திணைக்களத்திற்கு வருகை  தருவதன் மூலம் தங்களுக்கு கடவுச்சீட்டு ஒன்றைப் பெறுவது இலகுவானது.ஆனால்  விண்ணப்பதாரிகளின் நலன்கருதி 24 மணி நேர சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஒன்லைன் மூலமாக பாஸ்போட் பெறுவதற்குத் திகதி ஒதுக்காதவர்கள் தமது அவசரத் தேவையை நிரூபிப்பதற்கான காரணத்தைக் குறிக்கும் ஆவணத்துடன் வருகை தந்து வரிசையில் நன்று பாஸ்போட்டைப் பெறலாம்.

இரவு பகல் 24 மணி நேர சேவை வெள்ளிக்கிழமைகளில் நடைபெற மாட்டாது. அது போல அரச பொதுவிடுமுறை வருவதற்கு முதல் நாளும் நடைபெற மாட்டாது.

பாஸ்போட்  எடுப்பதற்கு படம்  அங்கீகரிக்கப்பட்ட படப்பிடிப்பு ஸ்ரூடியோ ஒன்றுக்குச் செல்லுங்கள். 

பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கலாம். ஆனால் ஆண்களோ பெண்களோ திருநீறு சந்தனம் வைத்துப் படம் எடுக்கக் கூடாது.ஸ்ரூடியோவில் படம் எடுத்தால் அதனைப் பதிவு செய்து ஒன்லைன் பிறின்ற் தருவார்.உங்களது பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதியை ஏதாவது ஒரு பிரதேச செயலகத்தில் எடுங்கள். ஏற்கனவே கைவசம் இருக்குமாயின் அது கிழியாத பேப்பருள்ள பிரதி ஆயின் அது போதுமானது. 

ஆறு மாதத்துக்கு உட்பட்ட  பிரதி வைத்திருப்பது நல்லது 

அதே போலத் தான் பெண்களும் தமது கணவரின் பெயர் மாற்றித் தேசிய அடையாள அட்டை எடுக்க வேண்டுமாயின் மேலே பிறப்புச் சான்றிதழ் தொடர்பான நடைமுறையே திருமணப் பதிவுச் சான்றிதழுக்குமானது. # அரச தனியார் துறைகளில் உத்தியோகம் பார்ப்பவர்களாயின் தமது  பதவிப் பெயரை இடுவதற்கு உங்களது மேலதிகாரியின் கடிதம் கடிதத் தலைப்பில் தேவையானது.

இறுதியாகப் பெற்ற பாஸ்போட் தொலைந்து போய் இருக்குமாயின் அதற்காகப் பொலிஸ் றிப்போட் பெறுவது கட்டாயமானது.  பாஸ்போட்டின் செல்லுபடியாகும் திகதி இருந்தால்  அதற்குரிய தண்டப்பணமாக 20 000 ரூபா செலுத்துல் வேண்டும்.

16 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளாயின் பெற்றோர் இருவரும் பிள்ளைகளுடன் செல்வது கட்டாயமானது.தமது பிள்ளை பாஸ்போட் பெறுவதற்குரிய சம்மதத்தைத் தாய் தந்தையர் இருவரும் வழங்க வேண்டும்.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையராயின் உங்களது நாடுகளிலுள்ள தூதரகங்கள் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்து இரண்டு வருடங்களுக்கு மேலாகப் பாஸ்போட் வரவில்லையெக் கூறுவோர் பலருண்டு.

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரக உத்தியோகத்தர்கள் கொழும்பிலுள்ள பாஸ்போட் அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்புகின்றனர். ஆனால் இங்கு பாஸ்போட் அலுவலகத்தின் இரண்டாம் மாடியிலுள்ள வெளிநாட்டுக் கிளையினர் விண்ணப்பங்களை எடுத்து ஒளிக்கின்றனர். பின்னர் தரகர்கள் மூலமாக 02 முதல் 04 இலட்ச ரூபா வரை வாங்கிய பின்பு பாஸ்போட்டை வெளிநாட்டுக்கு உரியவருக்கு அனுப்பி வைப்பதாகப் பலரது குற்றச்சாட்டு உள்ளது.

பாஸ்போட் அலுவலகத்தில் உணவு சிற்றுண்டி என்பவை வெளிக் கடைகளை விட 02 மடங்கு விலை. ஆகவே நீங்கள் வரும் போது பாஸ்போட் அலுவலகத்திற்கு 500 மீற்றர் தூரத்திலுள்ள உணவுக் கடைகளில் வாங்கவும். உங்களது பணத்தைச் சேமிக்கலாம்.

மிகவும் முக்கியமாக புதுப்பிப்பதற்கு  பழைய பாஸ் போட் கலர் பிரிண்ட், அடையாள அட்டை கலர் பிரிண்ட், நீங்கள் புகைப்படம் எடுத்த முகவர் நிலையம் தரும்  விண்ணப்பப் படிவம், பழைய பாஸ் போட் கட்டாயம் தேவை, (பாஸ்போட் தவறியிருந்தால் பழைய பாஸ் போட் மாத்திரம் தேவையில்லை) ஏனைய ஆவணங்கள் கட்டாயம் தேவை 

தற்போது ஒன்லைன் சேவை இல்லாமல் நேரடியாக சென்று விரைவாக கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ளும் வசதிகள் செய்து கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது தேவையில்லாமல் முகவர்களுக்கு பணத்தை கொடுத்து ஏமாறாதீர்கள் 

No comments