Page Nav

HIDE

Breaking News:

latest

சமூகத்தை சீரழிக்கும் குற்றவாளிகளுக்கு மன்னார் நீதிமன்றம் கடுமையான தண்டனைகளை வழங்கி வருகிறது

மன்னார் மாவட்டத்தில் போதைப் பொருள், பெண்கள் மீதான வன்முறைகள், போன்ற குற்றங்களை செய்தவர்களுக்கு மன்னார் நீதிமன்றம் அதிகபட்ச தண்டனைகளை வழங்கி ...

மன்னார் மாவட்டத்தில் போதைப் பொருள், பெண்கள் மீதான வன்முறைகள், போன்ற குற்றங்களை செய்தவர்களுக்கு மன்னார் நீதிமன்றம் அதிகபட்ச தண்டனைகளை வழங்கி வருவதை அண்மைய நாட்களில் அவதானிக்க முடிகிறது 

அதனடிப்படையில்  20 கிராம் மெத்தம் பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்தமை தொடர்பான வழக்கில் எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து மன்னார்  மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதே போல் மன்னார் அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய  துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டு அவருக்கு 8 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த போதைப் பொருள் குற்றம்  கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின் முடிவில் வழக்குத் தொடுநர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் எதிரி மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப் பட்டதாக மன்றம் ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து எதிரியை குற்றவாளியாக அறிவித்த   நீதிபதி  எதிரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அதே போல் துஷ்பிரயோக குற்றம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை மன்னார்  மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நேற்று புதன்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ்வழக்கின் நீண்ட விசாரணைகளின் பின்னர் எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டார் அரச சட்டவாதி அவர்களின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட   நீதிபதி  குற்றவாளிக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நஷ்ட ஈடாக 2,00000 ரூபாய் (இரண்டு லட்சம் ரூபா) தண்டப்பணம் செலுத்துமாறும் குற்றவாளிக்கு கட்டளையிட்டு நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார்.

குறித்த இரண்டு வழக்கும்  நேற்று புதன்கிழமை (12)மன்னார்   மேல் நீதிமன்ற நீதிபதி   எம். மிஹால்  அவர்களின்  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும் குற்றங்கள் உறுதிப்படுத்தப்படும் நபர்களுக்கு இவ்வாறான தண்டனைகள் வரவேற்கத் தக்கது என்றும் இதனால் எதிர்காலத்தில் போதைப் பொருள் பெண்கள் மீதான வன்முறை பல சமூக விரோத செயல்கள் இல்லாமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது 




 

No comments