புயல் நிவாரணம் மன்னார் மீனவர்களுக்கான வாழ்வாதாரப் பதிவுகள் இன்று ஆரம்பம்! அண்மையில் இலங்கையில் பெய்த கடும் புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினா...
புயல் நிவாரணம் மன்னார் மீனவர்களுக்கான வாழ்வாதாரப் பதிவுகள் இன்று ஆரம்பம்!
அண்மையில் இலங்கையில் பெய்த கடும் புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுஇ தமது வாழ்வாதாரங்களை இழந்த மன்னார் மாவட்ட மீனவர்களுக்கான முதற்கட்ட நிவாரண உதவிகள் மற்றும் வாழ்வாதாரக் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கான பதிவுகள் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீசிய கடும் புயல் மற்றும் மழையால் மன்னார் மாவட்டத்தில் பல மீனவக் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. அவர்களின் படகுகள்இ மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது இதனால் பல நாட்கள தொழிலுக்குச் செல்லாமல் முடக்கப்பட்டிருந்தனர்
தாங்கள் புயலால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக நிற்பதாகவும் தம்மைக் கவனிக்கவோ பார்க்கவோ எவரும் வரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் சிலர் ஊடகங்கள் வாயிலாக தமது ஆதங்கத்தையும் கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர்.
நேற்றைய தினம் (சனிக்கிழமை) மன்னார் மாவட்டச் செயலகத்தில் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக விசேடமான ஒரு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக் அவர்கள் நேரடியாகக் கலந்துகொண்டார். புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நிலைமைகளைக் கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள் உடனடியாக அவர்களுக்குத் தேவையான முதல்கட்ட நிவாரணங்களை வழங்குமாறும் பணிப்புரை விடுத்தார்
ஜனாதிபதி அவர்களின் இந்தப் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்டத்தின் பாதிக்கப்பட்டுள்ள மீனவக் கிராமங்களில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) புயலால் பாதிக்கப்பட்ட மன்னார் பனங்கட்டி கொட்டு மீனவர்களின் தரவுகளைப் பதிவு செய்யும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பதிவுகளின் போது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அவர்களுக்கும் கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களுக்கும் மீனவ மக்கள் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்
இதே வேளை புயல் பாதிப்புகளின் முன்னரும் பின்னும் இந்த நிவாரணம் கிடைப்பதற்கும் வடமாகான மீனவர் சங்க சமாசச் செயலாளர் ஆலம் உட்பட பல மீனவ பிரதிநிதிகள் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


.jpeg)
No comments