போதைப்பொருள் பாவித்த குற்றத்தில் 480 வாகன சாரதிகள் கைது - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
2026 ஆரம்பத்திலேயே அதிரடி: போதையில் வாகனம் செலுத்திய 480 சாரதிகள் கைது - அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்
கொழும்பு: இலங்கையில் 2026 ஆம் ஆண்டின் முதல் 22 நாட்களில் மட்டும் போதைப்பொருள் பாவித்த நிலையில் வாகனம் செலுத்திய 480 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சக்கர நாற்றகாலியூடாக இலங்கை முழுவதும் பயணத்தை ஆரம்பிக்கும் மாற்றாற்றல் கொண்ட இளைஞன்.
இது மிக முக்கியமான செய்தி இறுதி வரை படியுங்கள்
நேற்று வெள்ளிக்கிழமை (23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே நாட்டின் வீதிப் பாதுகாப்பு தொடர்பான இந்த முக்கிய புள்ளிவிபரங்களை அவர் வெளியிட்டார்.
22 நாட்களில் 135 வீதி விபத்துக்கள்
புத்தாண்டு தொடங்கிய மிகக்குறுகிய காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார். அமைச்சரின் உரையில் குறிப்பிடப்பட்ட முக்கிய தகவல்கள்:
விபத்துக்களின் எண்ணிக்கை: கடந்த 22 நாட்களில் 135 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
உயிரிழப்புகள்: இந்த விபத்துக்களில் 15 சாரதிகளும் 50 பாதசாரிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கைது நடவடிக்கைகள்: போதைப்பொருள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களைக் கண்டறிய நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போதே 480 சாரதிகள் சிக்கியுள்ளனர்.
சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் வாகனச் சாரதிகள் அனைவரும் பயணிகளின் உயிருக்குத் தாம் பொறுப்பு என்பதை உணர வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். "சாரதிகள் அனைவரும் தங்களது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து மிகுந்த பொறுப்புணர்வுடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும்" என அவர் கேட்டுக்கொண்டார்.
வீதி ஒழுக்கத்தை மீறுபவர்கள் மற்றும் போதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராகத் தராதரம் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தமிழ் வியூகம் செய்திகள்
tamilviyugam news
COMMENTS