இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னார் மாவட்டத்தில் 50 மெகாவாட் 'ஹேவிண்ட் வன் லிமிட்டெட் நிறுவன...
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னார் மாவட்டத்தில் 50 மெகாவாட் 'ஹேவிண்ட் வன் லிமிட்டெட் நிறுவனத்தின்' (HayWind One) காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (15.0 1.2026) மன்னார் கொன்னயன் குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது.
இதில் ஒரு நிகழ்வாக மன்னாருக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் மன்னார் பாலத்திலிருந்து தள்ளாடி வரையிலான மின் விளக்குகள் பொருத்தும் திட்டம் மன்னார் நகரசபை தலைவர் டானியல் வசந்தன் அவர்களிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது
இந்நிகழ்வில் வலுசக்தி கௌரவ அமைச்சர் குமார ஜெயக்கொடி, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், வலுசக்தி கௌரவ பிரதி அமைச்சர் முஹமது இலியாஸ் முஹமது அஹ்ரம் கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோரும், மன்னார் மாவட்டச் செயலர் கே.கனகேஸ்வரன், முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் பங்குபற்றியிருந்தனர்
மன்னார் பகுதியில் முன்னெடுக்கப்படும் இந்த 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டமானது, இந்தத் திட்டம் 18 மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. இதே நேரம் நாட்டின் தேசிய மின்வழங்கலுக்குத் தூய எரிசக்தியைச் சேர்ப்பதோடு, சூழலுக்கு உகந்த மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் ஒரு முன்னோடித் திட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி அவர்கள் மன்னார் வருகைக்காக குன்றும் குழியுமான வீதிகள் அவசரமாக செப்பனிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

.jpg)
.jpg)
No comments