மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தைப்பொங்கல் விழா
மன்னார்: வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில், 'வடக்கு மாகாணப் பொங்கல் விழா - 2026' வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வரம் திருக்கோவில் முன்றலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் வியூகம் மன்னார் செய்தியாளர்
தமிழர் பாரம்பரியம், கலை மற்றும் கலாச்சார விழுமியங்களை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் இந்த விழா அமைந்திருந்தது.
பாரம்பரிய முறைப்படி ஆரம்பமான விழா
நிகழ்வின் தொடக்கமாக, தமிழர்களின் தொன்மையான 'புதிரெடுத்தல்' சடங்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலய முன்றலில் மங்கல பொங்கலிடும் நிகழ்வு இடம்பெற்றதுடன், திருக்கேதீஸ்வர நாதருக்கு விசேட பூசை வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
கண்கவர் கலை நிகழ்ச்சிகள்
விழாவின் பிரதான நிகழ்வுகள் மன்னார் சவேரியார் பெண்கள் பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்டத்தின் பல்வேறு கலைப் பள்ளிகளின் ஆற்றுகைகள் அரங்கேறின:
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பொலிஸார் குவிப்பு திடீர் சோதனை நடவடிக்கை
சூரிய வணக்கம்: திரு அம்பலக்கூத்தன் நாட்டியக் கல்லூரி.
மகிழ்வித்து மகிழ்வோம் நடனம்: திருக்கேதீஸ்வரம் சிவனருள் இல்ல மாணவிகள்.
ஒயிலாட்டம்: பரதகலாலயா நாட்டியப் பள்ளி.
ஏந்தல் நடனம்: கலையருவி மாணவிகள்.
கதம்ப நடனம் & கோலாட்டம்: கலார்ப்பணா நாட்டியப் பள்ளி மற்றும் தீந்சா திருத்தியோதயம் கலாமந்திர்.
ஆளுநரின் உரை மற்றும் உபகரணங்கள் வழங்கல்
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், மாகாணத்தின் கலாச்சார முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரையைத் தொடர்ந்து, வடக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ், தெரிவு செய்யப்பட்ட கலா மன்றங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
விழாவின் ஒரு பகுதியாக, இளைய சமூகத்தினரிடையே பாரம்பரியத்தை வளர்க்கும் நோக்கில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன..jpg)
பங்கேற்ற முக்கிய அதிகாரிகள்
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பின்வரும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்:
திருமதி தனுஜா முருகேசன் (வடக்கு மாகாண பிரதம செயலாளர்)
க.கனகேஸ்வரன் (மன்னார் மாவட்டச் செயலர்)
எம்.பிரதீப் (மேலதிக மாவட்டச் செயலர்)
திருமதி என்.தர்சினி (பண்பாட்டலுவல்கள் உதவிப் பணிப்பாளர்)
பா.முகுந்தன் (விளையாட்டுத்துறைப் பணிப்பாளர்)
@tamilviyugam

COMMENTS