மன்னார் பேசாலையில் மூவியரசர் விழா இன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது
மன்னார்: 'மூவியரசர் பட்டினம்' என அழைக்கப்படும் மன்னார் - பேசாலை புனித வெற்றி அன்னை ஆலயத்தின் வருடாந்த மூவியரசர் பெருவிழா இன்று (4) பக்திப் பெருக்குடன் கோலாகலமாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட இந்நிகழ்வில், வருடத்தில் ஒருமுறை மட்டுமே நிகழும் "வெற்றி அன்னை சிம்மாசனத்தில் இருந்து இறங்கும்" அபூர்வ காட்சி அரங்கேறியது.
மூவியரசர் திருவிழாவின் மகத்துவம்
கத்தோலிக்கத் திருஅவையின் மரபுப்படி, வருடப் பிறப்புக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை மூவியரசர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. விண்ணக விண்மீனைப் பின்பற்றி வந்து பாலன் இயேசுவை மூன்று அரசர்கள் தரிசித்ததை நினைவுகூரும் இந்த விழா, பேசாலை புனித வெற்றி அன்னை ஆலயத்தில் தனித்துவமான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது
மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை-பல்வேறு கிராமங்களை வெள்ள நீரில் மூழ்கியது.
குழந்தை பேறு வேண்டி நின்ற குடும்பங்களுக்கு ஆசீர்
பேசாலை திருவிழாவின் மிக முக்கியமான மற்றும் புதுமை மிக்க நிகழ்வாகக் கருதப்படுவது 'வெற்றி அன்னையின் திருச்சுரூப இறக்கம்' ஆகும்.
சிம்மாசன இறக்கம்: பீடத்தில் உயரத்தில் வீற்றிருக்கும் அன்னை வெற்றி மாதாவின் திருச்சுரூபம், வருடத்தில் இந்த ஒரு நாள் மட்டுமே சிம்மாசனத்திலிருந்து கீழே இறக்கப்படும்.
குழந்தை இயேசுவை ஏந்துதல்: நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், அன்னையின் கையில் உள்ள குழந்தை இயேசுவின் (திருபாலன்) திருச்சுரூபத்தைத் தமது கைகளில் ஏந்தி ஆசி பெறும் உருக்கமான நிகழ்வு இடம்பெற்றது.
திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்
இந்த ஆன்மீக நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மன்னார் மாவட்டம் மட்டுமன்றி, இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம் குடும்பமாகப் பேசாலையில் வந்து குவிந்தனர். அன்னையின் ஆசியைப் பெறவும், நேர்த்திக் கடன்களைச் செலுத்தவும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததைக் காண முடிந்தது.
பேசாலை நகரே விழாக்கோலம் பூண்டிருந்த நிலையில், திருவிழாத் திருப்பலியைத் தொடர்ந்து அன்னையின் திருச்சுரூப பவனி மற்றும் விசேட ஆசீர்வாதங்கள் இடம்பெற்றன.

COMMENTS