Page Nav

HIDE

Breaking News:

latest

வவுனியா பல்கலைக்கழகத்தில் ரூ. 231 மில்லியன் செலவில் நவீன மாணவர் விடுதி

வவுனியா பல்கலைக்கழகத்தில் ரூ. 231  மி ல்லியன் செலவில் நவீன மாணவர் விடுதி: பிரதமர் ஹரினி அமரசூரிய அடிக்கல் நாட்டினார்! வவுனியா பல்கலைக்கழகத்த...

வவுனியா பல்கலைக்கழகத்தில் ரூ. 231 மில்லியன் செலவில் நவீன மாணவர் விடுதி: பிரதமர் ஹரினி அமரசூரிய அடிக்கல் நாட்டினார்!

வவுனியா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் வசதிகளை அதிகரிக்கும் நோக்கில், ரூபா 231 மில்லியன் மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய மாணவர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இலங்கையின் பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் கலந்துகொண்டு விடுதிக்கு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.


  • மாபெரும் தொலைநோக்குத் திட்டம்: பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்களின் தங்குமிடச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

  • சிறப்பு விருந்தினர்கள்: கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ உப்பாலி சமரசிங்க, வடக்குமாகாண ஆளுநர்      ந.வேதநாயகம் நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் கௌரவ செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

  • கல்விச் சமூகத்தின் ஆதரவு: இந்நிகழ்வில் பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இப்புதிய ஆடவர் விடுதியின் வருகை வவுனியா பல்கலைக்கழக மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 தமிழ் வியூகம்,வவுனியா,செய்தியாளர்,22/08/2026

@tamilviyugam

No comments