Page Nav

HIDE

Breaking News:

latest

இலங்கையில் பாஸ்போட் (கடவுச்சீட்டு ) ஒரே நாளில் எடுப்பதற்கு நடைமுறைகள் என்ன ?

Tamilviyugam Editorial, இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவதற்கான நடைமுறைகளில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ள...

Tamilviyugam Editorial,

இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவதற்கான நடைமுறைகளில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. தற்போது கொழும்பு பத்தரமுல்ல அலுவலகத்தில் ஒருநாள் சேவைக்கான டோக்கன்கள் (Tokens) காலை 7:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை வழங்கப்படுகின்றன.


1. விண்ணப்பிக்கும் இடங்கள்

  • தலைமை அலுவலகம்: பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு tamilviyugam திணைக்களத்தின் (Department of Immigration and Emigration, Suhurupaya) தலைமை அலுவலகத்தில் இச்சேவை நேரடியாக வழங்கப்படுகிறது.

  • பிராந்திய அலுவலகங்கள்: கண்டி, மாத்தறை, வவுனியா, குருநாகல் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒரு நாள் சேவைக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.                         

    பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

    • நேரில் சமூகமளித்தல்: கைரேகை (Fingerprints) மற்றும் பயோமெட்ரிக் தரவுகளைப் பெறவேண்டி இருப்பதால், விண்ணப்பதாரர் கட்டாயம் நேரில் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.

    • டிஜிட்டல் புகைப்படம்: அச்சிடப்பட்ட புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் எடுக்கும் நிலையத்திற்கு (Authorized Photo Studio) சென்று புகைப்படத்தை டிஜிட்டல் முறையில் சமர்ப்பித்து, அதற்கான ஒப்புகைச் சீட்டைப் (Acknowledgement Note) பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

    • விண்ணப்பப் படிவம்: திருத்தப்பட்ட K 35 A விண்ணப்பப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும்.

1. கடவுச்சீட்டு சேவைக் கட்டணங்கள்

தற்போது நடைமுறையிலுள்ள கட்டண விபரங்கள் பின்வருமாறு:

  • ஒரே நாள் சேவை (One Day Service): 20,000/- ரூபாய்.

  • சாதாரண சேவை (Normal Service): 10,000/- ரூபாய். (சாதாரண சேவையில் கடவுச்சீட்டு கிடைக்க சராசரியாக மூன்று மாதங்கள் வரை ஆகலாம்).

2. ஒன்லைன் (Online) பதிவு முறை

2024.11.06 முதல் புதிய பதிவு முறை அமுலுக்கு வந்துள்ளது.

  • விண்ணப்பதாரிகள் www.immigration.gov.lk என்ற இணையத்தளம் ஊடாக முன்கூட்டியே பதிவு செய்தல் கட்டாயம்.

  • பதிவு செய்வதற்குச் செல்லுபடியான தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் தொலைபேசி இலக்கம் அவசியமாகும். 16 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்குப் பெற்றோரின் அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தலாம்.

  • பதிவு வெற்றிகரமாக முடிந்ததும், உங்களுக்கு ஒரு SMS குறுஞ்செய்தி வரும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள tamil vyugam திகதி மற்றும் நேரத்தில் (முற்பகல் 12:00 மணிக்கு முன்னர்) உரிய அலுவலகத்திற்கு (கொழும்பு, மாத்தறை, கண்டி, குருணாகல் அல்லது வவுனியா) செல்ல வேண்டும்.

3. நேரடிச் சேவை மற்றும் 24 மணிநேர வசதி

அவசரத் தேவை உள்ளவர்களுக்காக 24 மணிநேரச் சேவை வசதி செய்யப்பட்டுள்ளது. ஒன்லைனில் திகதி ஒதுக்காதவர்கள், தமது அவசரத்தை நிரூபிக்கும் ஆவணங்களுடன் (உதாரணமாக: மருத்துவத் தேவை, அவசர வேலை வாய்ப்பு) நேரில் சென்று வரிசையில் நின்று கடவுச்சீட்டைப் பெறலாம்.

  • குறிப்பு: இந்த 24 மணிநேரச் சேவை வெள்ளிக்கிழமைகளிலும், பொது விடுமுறைக்கு முந்தைய தினங்களிலும் நடைபெறாது.

4. புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பான விதிகள்

  • புகைப்படம்: அங்கீகரிக்கப்பட்ட ஸ்டுடியோவில் (Studio) புகைப்படம் எடுக்க வேண்டும். பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கலாம், ஆனால் ஆண்கள் மற்றும் பெண்கள் திருநீறு அல்லது சந்தனம் அணிந்து படம் எடுக்கக் கூடாது.

  • பிறப்புச் சான்றிதழ்: ஆறு மாதங்களுக்குள் பெறப்பட்ட புதிய அல்லது சிதையாத மூலப் பிரதி (Original) அவசியமாகும்.

  • தொழில் விபரம்: அரச அல்லது தனியார் துறையில் பணியாற்றுவோர் தமது பதவியைப் பாஸ்போர்ட்டில் குறிப்பிட விரும்பினால், மேலதிகாரியின் கடிதத் தலைப்பிலான (Letterhead) உறுதிப்படுத்தல் கடிதம் தேவை.

  • காணாமல் போன கடவுச்சீட்டு: பழைய கடவுச்சீட்டு தொலைந்திருந்தால் பொலிஸ் அறிக்கை கட்டாயம். அதன் செல்லுபடியாகும் காலம் எஞ்சியிருந்தால் 20,000/- ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

5. முக்கிய எச்சரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள்

தரகர்களிடம் ஏமாறாதீர்கள்: தற்போது நேரடியாகச் சென்று விரைவாக கடவுச்சீட்டைப் பெறும் வசதிகள் உள்ளன. எனவே, ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொடுத்துத் தரகர்களிடம் ஏமாற வேண்டாம். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தூதரகங்கள் ஊடாக விண்ணப்பிக்கும்போது தாமதம் ஏற்பட்டால், உரிய முறையில் திணைக்களத்தைத் தொடர்பு கொள்ளவும்.

தமிழ் மக்களின் காணிப்பிரச்சனை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் நேரடியாக எடுத்துரைப்பு

உணவு மற்றும் செலவுகள்: பத்தரமுல்ல அலுவலக வளாகத்தில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் உணவுகளின் விலை மிக அதிகம். எனவே, அலுவலகத்திற்கு வெளியே சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள உணவகங்களில் உணவை வாங்கிக் கொள்வது உங்கள் பணத்தைச் சேமிக்க உதவும்.

தேவையான ஆவணங்களின் பட்டியல் (மீளப் புதுப்பிப்போர்)                       1.பழைய கடவுச்சீட்டின் வர்ணப் பிரதி (Color Print).2அடையாள அட்டையின் வர்ணப் பிரதி 3.புகைப்பட ரசீது 4.பழைய கடவுச்சீட்டின் மூலப் பிரதி.  

நினைவில் கொள்க: நீங்கள் ஒதுக்கப்பட்ட நாளில் சமூகமளிக்கத் தவறினால், உங்கள் சந்தர்ப்பம் இழக்கப்படும். மீண்டும் புதிய பதிவை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, உரிய நேரத்தில் சமூகமளிப்பதை உறுதி செய்யவும்.

  • டிஜிட்டல் புகைப்படம்: அச்சிடப்பட்ட புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் எடுக்கும் நிலையத்திற்கு (Authorized Photo Studio) சென்று புகைப்படத்தை டிஜிட்டல் முறையில் சமர்ப்பித்து, அதற்கான ஒப்புகைச் சீட்டைப் (Acknowledgement Note) பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

  • விண்ணப்பப் படிவம்: திருத்தப்பட்ட K 35 A விண்ணப்பப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும்.

3. தேவையான ஆவணங்கள்

  • தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் அதன் பிரதிகள்.

  • பிறப்புச் சான்றிதழ்.

  • ஏற்கனவே கடவுச்சீட்டு வைத்திருப்பின் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.

  • தேவையின் அடிப்படையில் திருமணச் சான்றிதழ் அல்லது வேலைவாய்ப்பு கடிதம் (தேவைப்படுவோர் மட்டும்).

4. கட்டண விவரங்கள்

  • அவசர / ஒரு நாள் சேவைக்கான கடவுச்சீட்டுக் கட்டணம் பொதுவாக 20,000 இலங்கை ரூபா ஆகும் (இது சாதாரண சேவைக்கான கட்டணத்தை விட கூடுதலானது).

கவனிக்க வேண்டியவை: ஒரு நாள் சேவையைப் பெற விரும்புவோர் காலை வேளையிலேயே (வழக்கமாக காலை 7.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிக்குள் தலைமை அலுவலகத்திற்கு) செல்வது சிறந்தது

ஆனால் நிறைய நபர்கள் வருவதால்  அதிகாலை 5.00 மணிக்கெல்லாம்  மக்கள் வரிசையில் நிற்பார்கள் முடிந்த அளவு நீங்களும்  நேரகாலத்திற்கு  செல்வது மிகவும் நல்லது

    @tamilviyugam

                                                                


 

 





No comments