மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதி சிப்பியாறு பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிய வருகிறது இந்த சம்பவமானது நேற்று ...
மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதி சிப்பியாறு பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிய வருகிறது
இந்த சம்பவமானது நேற்று 15 இரவு ஏழு மணியளவில் மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதி சிப்பியாறு பகுதியில் இடம்பெற்றள்ளது
இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்
மன்னாரிலிருந்து யாழ் நோக்கி சென்ற பார ஊர்தி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த பாலத்தினுள் விழுந்துள்ளது இதன் போது வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளரும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுஇந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை இலுப்பக்கடவை பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


No comments