TAMILVIYUGAM.COM, COLOMBO, REPORTER, 31/08/2026 கொழும்பு: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான SAARC Human Rights Foundation - Sri Lanka Chapter ...
TAMILVIYUGAM.COM, COLOMBO, REPORTER, 31/08/2026
கொழும்பு: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான SAARC Human Rights Foundation - Sri Lanka Chapter இன் மன்னார் மாவட்டப் புதிய தலைவியாக, பேசாலையைச் சேர்ந்த திருமதி றோமன் டிவ்னா குருஸ் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
கோலாகலமாக நடைபெற்ற நியமன விழா மற்றும் இதழ் வெளியீடு
கொழும்பில் உள்ள YMBA வளாகத்தில் அமைந்துள்ள Ruknu Food Central அரங்கில், SAARC Human Rights Foundation அமைப்பின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்ட சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.
இவ்விழாவில் அமைப்பின் இரு வருடத்திற்கு ஒருமுறை வெளியாகும் Bi-Annual Magazine இதழும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வின் போதே, திருமதி றோமன் டிவ்னா குருசுக்கான அதிகாரப்பூர்வ அடையாள அட்டை மற்றும் நியமனக் கடிதம் என்பன வழங்கி வைக்கப்பட்டு, மன்னார் மனித உரிமைகள் அமைப்பின் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.
இஷாரா செவ்வந்தி தப்பிச்செல்ல படகு தந்த நபர் மன்னாரில் அதிரடி கைது வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்
சிறப்பு விருந்தினராக பங்களாதேஷ் பேராசிரியர் பங்கேற்பு
இவ்விழாவில் சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் இலங்கை மனித உரிமைகள் சார்ந்த முக்கியஸ்தர்கள் viyugam பலர் கலந்துகொண்டனர். குறிப்பாக, பங்களாதேஷைச் சேர்ந்த SAARC Human Rights Foundation இன் பொதுச் செயலாளர் பேராசிரியர் அபேத் அலி (Prof. Abed Ali) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும், SAARC Sri Lanka Chapter ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மற்றும் பிரதேசப் பிரதிநிதிகள் பலர் பங்கெடுத்தனர்.
மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள முக்கிய திட்டங்கள்
மன்னார் மாவட்டத் தலைவியாகப் புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட திருமதி றோமன் டிவ்னா குருஸ் தனது எதிர்காலச் செயற்பாடுகள் குறித்துப் பேசுகையில்:
பின்தங்கிய மக்களின் உரிமைகள்: சமூகத்தில் நலிவடைந்த மற்றும் பின்தங்கிய மக்களின் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாப்புக்காகக் குரல்கொடுத்தல். tamil_viyugam_news
பெண்கள் சிறுவர் உரிமைகள்: பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளைப் பலப்படுத்துவதோடு, அவர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை உறுதிசெய்தல்.
சமூக நல்லிணக்கம்: மன்னார் மாவட்டத்தில் சமத்துவம், சமூக நீதி மற்றும் இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடுகளை விரிவாக்குதல்.
ஆகிய துறைகளில் முதன்மையாகக் கவனம் செலுத்தி அர்ப்பணிப்புடன் பணியாற்றவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மன்னார் மாவட்டத்திற்கு புதிய வாய்ப்பு
இப்புதிய நியமனமானது, மன்னார் மாவட்டத்தில் மனித உரிமைகள் பாதுகாப்பு, சமூக நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவதற்குக் கிடைத்த ஒரு முக்கிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. அமைப்பின் செயற்பாடுகள் கிராமமட்டங்களை சென்றடையும் வகையில் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமதி றோமன் டிவ்னா குரூஸ் மன்னார் மாவட்டம் பேசாலை வட்டாரத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
@tamilviyugam


COMMENTS