TAMILVIYUGAM.COM, COLOMBO, REPORTER, 31/08/2026 சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட புதிய தலைவியாக திருமதி கலைவாணி சிறிகாந்த...
TAMILVIYUGAM.COM, COLOMBO, REPORTER, 31/08/2026
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட புதிய தலைவியாக திருமதி கலைவாணி சிறிகாந்தன் நியமனம்!
கொழும்பு: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான SAARC Human Rights Foundation - Sri Lanka Chapter இன் கிளிநொச்சி மாவட்டப் புதிய தலைவியாக, திருமதி கலைவாணி சிறிகாந்தன் (Kalaivani Srikanth) அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு (Kilinochchi District) பெருமை சேர்த்துள்ளார்.
கோலாகலமாக நடைபெற்ற நியமன விழா மற்றும் இதழ் வெளியீடு
கொழும்பில் உள்ள YMBA வளாகத்தில் அமைந்துள்ள Ruknu Food Central அரங்கில், SAARC Human Rights Foundation அமைப்பின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்ட சிறப்புக்கூட்டம் நடைபெற்றது.
கோடி அற்புதங்கள் செய்யும் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா சிறப்பு
இவ்விழாவில் அமைப்பின் இரு வருடத்திற்கு ஒருமுறை வெளியாகும் Bi-Annual Magazine இதழும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வின் போதே, திருமதி கலைவாணி சிறிகாந்தன் அவர்களுக்கான அதிகாரப்பூர்வ அடையாள அட்டை மற்றும் நியமனக் கடிதம் என்பன வழங்கி வைக்கப்பட்டு, கிளிநொச்சி மனித உரிமைகள் அமைப்பின் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராக பங்களாதேஷ் பேராசிரியர் பங்கேற்பு
இவ்விழாவில் சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் Human Rights Sri Lanka சார்ந்த முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர். குறிப்பாக, பங்களாதேஷைச் சேர்ந்த SAARC Human Rights Foundation இன் பொதுச் செயலாளர் பேராசிரியர் அபேத் அலி (Prof. Abed Ali) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும், SAARC Sri Lanka Chapter ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மற்றும் பிரதேசப் பிரதிநிதிகள் பலர் பங்கெடுத்தனர் என Tamil Viyugam News செய்திப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள முக்கிய திட்டங்கள்
கிளிநொச்சி மாவட்ட மனித உரிமைகள் தலைவியாகப் புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட திருமதி கலைவாணி சிறிகாந்தன் தனது எதிர்காலச் செயற்பாடுகள் குறித்துப் பேசுகையில்:
பின்தங்கிய மக்களின் உரிமைகள்: சமூகத்தில் நலிவடைந்த மற்றும் பின்தங்கிய மக்களின் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாப்புக்காகக் குரல்கொடுத்தல்.
பெண்கள் சிறுவர் உரிமைகள்: பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளைப் பலப்படுத்துவதோடு, அவர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை உறுதிசெய்தல்.
சமூக நல்லிணக்கம்: கிளிநொச்சி மாவட்டத்தில் சமத்துவம், சமூக நீதி மற்றும் இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடுகளை விரிவாக்குதல்.
ஆகிய துறைகளில் முதன்மையாகக் கவனம் செலுத்தி அர்ப்பணிப்புடன் பணியாற்றவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு புதிய வாய்ப்பு
இப்புதிய நியமனமானது, கிளிநொச்சி மாவட்டத்தில் மனித உரிமைகள் பாதுகாப்பு, சமூக நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவதற்குக் கிடைத்த ஒரு முக்கிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. அமைப்பின் செயற்பாடுகள் கிராமமட்டங்களை சென்றடையும் வகையில் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூகப் பணிகள்
திருமதி கலைவாணி சிறிகாந்தன் அவர்கள் கிளிநொச்சி மாவட்டம், நாதன்திட்டம் புன்னைநீராவி தருமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
மேலும் இவர் கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேசசபையின் முன்னைநாள் உறுப்பினர் என்பது கூடுதல் தகைமையாகும்
இவர் கிளிநொச்சி லயன்ஸ் கழகத்தின் (Kilinochchi Lions Club) தீவிர உறுப்பினராகச் செயற்பட்டு வருவதுடன், ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் மாவட்டப் பொறுப்பாளராக இருந்து சமூகத் தொண்டு மற்றும் அறநெறிப் பாடசாலைகளை மிகச் சிறப்பாக நடாத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
@tamilviyugam



COMMENTS