Page Nav

HIDE

Breaking News:

latest

வடமாகாண மீனவர்கள் பிரதிநிதிகள் கடற்தொழில் அமைச்சர் கொழும்பில் திடீர் சந்திப்பு

வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகளுக்கும் கடற்தொழில் அமைச்சருக்கும் இடையில் திடீர் சந்திப்பு ஒன்று  கொழும்பில் உள்ள அமைச்சின் அலுவ...

வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகளுக்கும் கடற்தொழில் அமைச்சருக்கும் இடையில் திடீர் சந்திப்பு ஒன்று  கொழும்பில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் நேற்றையதினம் (11-6-2025) நணபகல் இடம்பெற்றது

மாவட்ட  பிரதிநிதிகள்

இந்த சந்திப்பில் மன்னார் யாழ்ப்பாணம் முல்லத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து இரண்டு   மீனவர்களின் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்

குறித்த சந்திப்பில் கடற்தொழில் அமச்சரின் செயலாளரும் கலந்து கொண்டிருந்தார்

இந்த சந்திப்பின் போது  இந்திய மீனவர்களில்  வருகயை இல்லாமல் செய்வது  நாட்டின் ஜனாதிபதியை வடமாகாண கடற் தொழிலாளர் இணையப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடுவது  வடமாகாண மீனவ கூட்டுறவு சங்கத்தை வலுப்படுத்துவது போன்ற முக்கியமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது

வடமாகாண  கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவிப்பு.

எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.எதிர்வரும் 15 ஆம் திகதியில் இருந்து இலங்கை கடல் எல்லையை கடற்படை ஊடாக தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை முன் கெடுப்பதோடு,அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களையும்,அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வட பகுதி மீனவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.அரசு தனது செயல்பாட்டில் உறுதியாக இருக்கிறது என்கிற தகவலை மீன்பிடி அமைச்சர் உறுதியாக தெரிவித்திருந்தார்.

அரசாங்கம் அத்துமீறிய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தீவிரமாக உள்ளது என்பதை நாங்கள் அறிகிறோம்.எனினும் கடற்படை,அரசாங்கம் இவ்விடயத்தில் கவனயீனமாக இருப்பார்கள் எனினும் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்கின்ற அச்சம் மீனவர்களிடம் காணப்படுகின்றது என்கிற விடையத்தை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த கால விடயங்கள் மீண்டும் ஞாபகப் படுத்தப்பட்டது 

அண்மையில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட வேளை அங்கு நடைபெற்ற சிறு அசம்பாவிதத்தால் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அனைத்து தரப்பினரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது 

இந்திய மீனவர்களின் தவறு

இலங்கை ஒரு இறையாண்மை உள்ள நாடு  அப்படி இருக்கையில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபடும் பொழுது அவர்களை கைது செய்வது இலங்கை கடற்படையின் கடமை  இந்திய மீனவர்கள் ஒரு மாதத்தில் இரண்டு மூன்று தடவைக்கு மேல் கைது செய்யப்பட்டு பலர் இலங்கை சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள் ஆனாலும் இந்திய மீனவர்கள் தங்களது தவறுகளை திருத்திக் கொள்வதாக தெரியவில்லை 

LINK:தொடரும் தமிழர்களுக்கு எதிரான கன்னட கிளர்ச்சி இனவெறிக் கொள்கை  ஆரம்ப வரலாறு

குழப்பம் விளைவிக்க ஏற்பாடு 

இந்திய மீனவர்களது இந்த விரும்பத் தகாத செயற்பாடுகளால் இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் முறுகல் நிலை தொடரவும்  அதே போல் இரு கரையிலும்இருக்கும் தமிழ் பேசும் சமூகங்களுக்குள் முரண்பாடுகளை தோற்றுசவிப்பதற்காக திட்டமிட்டு   செயற்படுத்தப்படுகிறார்களா என்னும் சந்தேகம் இரண்டு தரப்பிலும் எழாமல் இல்லை

இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளால் இலங்கை வட பகுதியில் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற மீனவகுடும்பங்கள் பாரிய  பிரச்சனைகனைகளை எதிர் கொண்டுள்ளார்கள்  இந்திய மீனவர்களின் இராட்சத இழுவைப் படகுகளால்  இலங்கை கடல் எல்லைக்குள் இருக்கும்  பாரிய மீன் வளத்தை அள்ளிச் செல்கிறர்கள் குறிப்பாக பல்லாயிரம் கிலோ குஞ்சு மீன்களை அள்ளிச் சென்று அவர்களது கரையில் வீசிவிடுகிறார்கள் 

உபகரணங்கள் திருட்டு 

தொடர்ச்சயாக  இலங்கை கடற்பரப்பிற்குள் வரும்  இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களினால் கடலில் பாய்ச்சப்பட்டுள்ள  விலை மதிப்பு மிக்க வலைகளை களவாடியும் அறுத்து சேதப்படுத்தியும் சென்று விடுகிறார்கள்  இதனால் ஏற்கனவே மீன்பாடுகள் இல்லாமல் போதிய வருமானம் இல்லாமல் பரிதவிக்கும் இலங்கை மீனவர்களால்  அறுத்து சேதப்படுத்தி களவாடிப் போன மீன் பிடி வலைகளை புதிதாக கொள்வனவு செய்யமுடியாமல்  தொடர்ச்சியாக தொழிலுக்கு செல்லமுடியாத நிலையிலும் உள்ளார்கள் 

முயற்சிகள் தோல்வி 

இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கை வட பகுதி மீனவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தி இந்த  பிரச்சனைகளுக்கு தீர்கான பலர் முற்பட்ட போதும் அவை தோல்வியில் முடிந்துள்ளது என்று  மன்னார் மீனவர் சங்கங்களின் சமாச செயலாளர் தெரிவிக்கின்றார் 

இலங்கை மீனவர்களின் கவலை

இந்திய இலங்கை கடலில் உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் குறித்த விடயத்தை இலங்கை மீனவர் சங்கத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்ற போதும் இந்திய அரசாங்கமும்  அந்நாட்டு மீனவர்களும் காது கொடுத்து கேட்பதாக இல்லை.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த மையின்  ஏற்பட்ட கைது நடவடிக்கையின் காரணமாக இந்திய மீனவரின் உயிரிழப்பு சம்பவம் இடம் பெற்றுள்ள போதும் குறித்த சம்பவங்கள் இடம் பெறக் கூடாது என இந்திய மீனவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதும் இதுவரை இவர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

கைது செய்வது கடற்படையின் கடமை

இறைமையுள்ள அரசு தனது கடல்வளத்தை பாதுகாக்கும் உரிமை கொண்டுள்ளர் ஆகவே கடலிலே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுகின்ற பாதுகாப்பு தரப்பினர் அடிக்கடி கடலிலே கைது செய்கின்ற நடவடிக்கைகளை மேற் கொள்ளுகின்றனர் இவ்வாறு அண்மையில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர் ஒருவரை கைது செய்ய முயன்ற போது கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார் 

இந்திய மீனவர்கள் திருந்த வேண்டும் 

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீனபிடியில் ஈடுவதால் இழப்பு இந்தி மீனவர்களுக்குத்தான் அவர்களுடைய படகுகள் இலங்கை அரசுடமையாகும் மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் இதனால் அப்பாவி மீனவ குடும்பங்களின் வாழ்க்கை பாதிப்படையும் இவ்வாறு உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டுமானால் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில்  ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் 

போராட்டம் செய்து பலன் என்ன ?

தங்கள் மீது தவறுகளை வைத்துக் கொண்டு மீனவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டவுடன் போராட்டங்கள் செய்து பலன் என்ன இந்திய கடல் எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை ஒரு போதும் கைது செய்யவில்லை இச்சம்பவமானது தமிழக மீனவர்களின் செயற் பாட்டினாலேயே நிகழ்ந்துள்ளது.இதற்காக அங்கே பாரிய அளவில் போராட்டங்கள் செய்து பலனில்லை என்பதை மீனவர்கள் உணர வேண்டும் 

இலங்கை மீனவர்கள் கடந்த காலங்களில் யுத்தம் கொரோனா பொருளாதாரப் பிரச்சனை என்று பல வழிகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் அப்படி இருந்தும் தங்களது எதிர்கால சந்ததியினரில் நலன் கருதி  கடல் வளத்தை பாதுகாத்து மீன் பிடியில் ஈடுபடுகிறார்கள் ஆனால் 

இந்திய மீனவர்கள் தூர நோக்கு சிந்தனை இல்லாமல் கடல் வளத்தை அழித்து விட்டு தற்போது இலங்கை தமிழர் தாயக கடல் வளத்தை சூறையாடுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்  இந்த செயற்பாடுகள் தவறானது இந்திய மீனவர்கள் உரிய முறையில் சிந்தித்து தங்களது குடும்பங்களின் நலன் கருதி இலங்கை கடல் எல்லைக்குள் வருவை நிறுத்த வேண்டும் அத்துடன் தங்களது நாட்டின் கடல்வளங்களை பாதுகாத்து  மீனினிப் பெருக்கததை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் இறங்கி  உங்களது வாழ்வை வளப்படுத்தும் முயற்சிகளை செய்ய வேண்டும் 

இந்திய மீனவர்களின் மீன் பிடி தடைக் காலம் நிறைவு

இந்திய மீனவர்களின் சுயமான மீன் பிடி தடைக் காலம் அதாவது மீன் இனப்பெருக்கத்திற்காக இரண்டு மாதங்கள்  கடலில் தொழிலுக்கு போகாமல் இருப்பது அவர்களுக்கு உள்ள சட்ட விதி குறித்த தடைக் காலம்  எதிர் வரும் 15ம் திகதி முடிவடைந்து மீண்டும் தொழிலுக்குச் செல்ல  உள்ளனர் இந்த நிலையில்  கடற்தொழில் அமைச்சருடன் இந்த சந்திப்பு நடைபெற்றது

LINK:நீரிழிவு நோய் ஏற்பட முக்கிய காரணங்கள் என்ன? எவ்வாறு கட்டுப்படுத்துவது

மீன்பிடி அபிவிருத்தி குழு கூட்டம்    

மேலும் எதிர்வரும் 25ம் திகதி மன்னார் மாவட்டச் செயலகத்தின்  மீன்பிடி அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த கூட்டத்தில் மன்னார் மாவட்ட மீனவர்கள் மற்றும் மீனவர்களின்  பிரதிநிதிகள் கடற்தொழில் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளரும் கலந்து கொள்வதோடு மீனவர்களின் பலவேறுபட்ட பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 




No comments