மன்னாரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் குறித்த இருவரும்...
மன்னாரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவருக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை மற்றும் குறித்த இருவரும் பணியாற்றிய உணவகத்துக்கு 83000 ஆயிரம் ரூபா தண்டப்பணம் நேற்றைய தினம் (5) மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபை பொது சுகாதார பரிசோதகரினால் மன்னார் மாவட்டத்தில் சாவற்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது தலையுறை பயண் படுத்தாமை,மருத்துவ அனுமதி பொறாமை,உணவுகளை ஒழுங்கற்ற முறையில் களஞ்சியப் படுத்தியமை,கழிவுநீர் தொட்டியை உரிய முறையில் பேணாமை,சுத்தம் பேணப் படாமை போன்ற ஒன்பது குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் (5) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த சம்பவத்தில் சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தப்பட்ட உணவகத்தில் முகாமையாளர் மற்றும் ஊழியருக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் அதே நேரம் உணவகத்துக்கு 83000 ரூபா தண்டப் பணமும் விதிக்கப்பட்டது.
அத்துடன் மன்னார் தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மனித நுகர்வுக்கு பொருத்த மற்ற சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டு மன்னார் நகரசபை பொது சுகாதார பரிசோதகர் முன்னிலையில் அழிக்கப்பட்டுள் ளன.
பீடி இலை மூட்டைகளுடன் நான்கு(4)சந்தேக நபர்கள் கைது
மேலும்கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைவாக கடற்படை மற்றும் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இன்று வெள்ளிக்கிழமை (6) காலை நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் நான்கு(4)சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் மது வரி ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கடற்படையினர் மற்றும் மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி டி.பி.அளவத்தகம தலைமையிலான மது வரி அதிகாரிகள் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (6) காலை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,நடுக்குடா கடற்கரை பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது சந்தேகத்திற்கிடமான இரண்டு படகுகளில் காணப்பட்ட பொதிகளை சோதனை செய்த போது குறித்த படகுகளில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பீடி இலைகளை மீட்டனர்.
குறித்த இரு படகுகளில் இருந்தும் 40 மூடைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 1250 கிலோ பீடி இலைகள் இவ்வாறு மீட்கப்பட்டது.மேலும் குறித்த படகுடன் கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 4 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
-மீட்கப்பட்ட பீடி இலை மூடைகள் கடற்படையின் உதவியுடன்,மன்னார் மது வரி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுவரை பேசப்படாத மன்னார் பேசாலையின் மறுபக்கம்-இடப்பெயர் ஆய்வு-ஊடகவியலாளர் ஜெகன்
மேலும் மீட்கப்பட்ட இரண்டு படகுகளின் வெளி இணைப்பு இயந்திரங்கள் மற்றும் ஏனைய பொருட்களும் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களையும் கடற்படையினர் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments