மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிற்கான முன்னாயத்த கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்ற...
மன்னார் மடுத் திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிற்கான முன்னாயத்த கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்று வியாழக்கிழமை(24) காலை 9.30 மணியளவில் மாவட்டச் செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
வருடா வருடம் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழமை அவ்வாறு வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய சகல விதமான ஏற்பாடுகள் குறித்து அழைக்கப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடப்பட்டது நடைபெற்றது
இந்த கலந்துரையாடலில் சுகாதாரம் போக்குவரத்து மருத்துவ வசதிகள் நீர் விநியோகம் இஉணவு விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த முன்னாயத்த கலந்துரையாடலில் குரு முதல்வர் அருட்தந்தை மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை காவல்துறையினர் இகடற்படை அதிகாரிகள்பிரதேச செயலாளர்கள் வைத்தியர்கள் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த வருடம் மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கப் பட்டுள்ள நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
No comments