Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் நகரசபையால் நீர் வடிகான்கள் சுத்தப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு

மன்னார் நகரசபை எல்லைக்குள் நீண்டகாலமாக துப்பரவு செய்யப்படாமல் உரிய பராமறிப்பின்றி பிளாஸ்ரிக் மற்றும் ஏனைய கழிவுகளால் நிறைந்து காணப்பட்ட பிரத...

மன்னார் நகரசபை எல்லைக்குள் நீண்டகாலமாக துப்பரவு செய்யப்படாமல் உரிய பராமறிப்பின்றி பிளாஸ்ரிக் மற்றும் ஏனைய கழிவுகளால் நிறைந்து காணப்பட்ட பிரதான வாய்கால்களை சுத்தப்படுத்தும் பணி இன்றையதினம் வியாழக்கிழமை காலை தொடக்கம் இம்மாத இறுதிவரை இடம் பெறவுள்ளது


 மழையுடன் கூடிய காலநிலை ஏற்படவுள்ள நிலையில் மன்னார் நகர்பகுதிக்குள் ஏற்படும் வெள்ளப்பாதிப்புக்களை குறைக்கும் முகமாக நகரசபை ஊழியர்கள் மற்றும் நகரசபை உறுப்பினர்கள்,நகரசபை சுகாதார உத்தியோகஸ்தரின் பங்கு பற்றுதலுடன் குறித்த சுத்தப்படுத்தல் பணி இடம் பெற்று வருகின்றது

குறிப்பாக எமில்நகர் தொடக்கம் பனங்கட்டு கொட்டு பகுதியூடாக கழிவு நீர் வடிந்தோடி கடலுடன் கலக்கும் பிரதான கால்வாய் முதல் கட்டமாக இன்று சுத்தப்படுத்தப்பட்டு கழிவுகள் அகற்றப்பட்டதுடன் இதனை தொடர்ந்து இம் மாதம் முழுவதும் பிரதான வாய்கால்கள் அனைத்தும் நகரசபையால் சுத்தப்படுத்தப்படவுள்ளது

அதே நேரம் இம் முறை வடிகால் துப்பரவுக்காகவும் பராமரிப்புக்காவும் மன்னார் நகரசபையால் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments