வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ம் திகதி அதிகாலை ஏற்பட்ட விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது குடும்பத்தினர் படுகாயமடைந்து வைத்தியசாலை...
வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ம் திகதி அதிகாலை ஏற்பட்ட விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது குடும்பத்தினர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்கள்
குறித்த விபத்தின் போது வீதியால் பயணித்த இளைஞர் ஒருவர் காயப்பட்டவர்களை உடனடியாக வீதியால் சென்ற வாகனம் ஒன்றை நிறுத்தி அதன்மூலம் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளார் இதன்போது காயமடைந்தவர்களின் உடைமையில் இருந்த ஒரு தொகை பணம், மற்றும் நகைகள், கையடக்க தொலைபேசி என்பனவற்றை குறித்த இளைஞர் பாதுகாப்பாக பத்திரப்படுத்தியிருந்துள்ளார்
நேற்றைய தினம் (30) அந்த இளைஞர் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்களை தொடர்பு கொண்டு குறித்த விடயத்தை கூறியிருந்தார், உயிரிழந்தவர் யாழ் இந்திய துனைதூதரகத்தில் பணியாற்றியவர் என்பதுடன் குறித்த ஊடகவியலாளருடன் நெருக்கத்தில் இருந்தவரும் எனவே கார்த்தீபன் அவர்கள் யாழ் இந்திய துனை தூதுவரை தொடர்புகொண்டு குறித்த விடயத்தை கூறி அந்த இளைஞரையும் அவருடன் தொடர்புபடுத்தியிருந்திருந்தார்
அதனை தொடர்ந்து அந்த இளைஞர் நேற்றைய தினமே யாழ் இந்திய துனைதூதுவராலயத்திற்கு சென்று குறித்த பொருட்களை அவர்களிடம் ஒப்படைத்திருந்தார் இந்திய தூதரகம் குறித்த இளைஞனின் செயலை பாராட்டியுள்ளார்கள்
அத்துடன் இந்த செய்தியை அறிந்ந பொது மக்கயுளும் சமூக நலன் விரும்பிகளும் பாராட்டி வருகிறார்கள்
குறித்த மனிதாபிமான செயலை செய்தவர் வவுனியா புளியங்குளத்தை பூர்வீகமாகவும் தற்பொழுது சிதம்பரபுரத்தில் வசித்து வரும் 34 வயதுடைய செல்வராசா நிரோசிகன் என்பவராகும் இவர் ஒரு பேருந்து சாரதி என்பதும் குறிப்பிடத்தக்கது
குறித்த இளைஞர் மக்களிடத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்
அதாவது வீதிகளில் விபத்துக்கள் ஏற்பட்டால் அருகில் இருப்பவர்கள் உடனடியாக உதவிகளை செய்து குறித்த உயிர்களை காப்பாற்ற முன்வாருங்கள் என்றும் அப்படியான சந்தரப்பங்களில் வேறு எந்த நோக்கமும் இல்லாது பாதிக்கப்பட்டவர்களின் உடைமைகளை பாதுகாத்து அவர்களிடம் ஒப்படைக்குமாறும் விபத்து எல்லோருக்கும் ஏற்படும் அதனை மனதில் வைத்து செயல்படுங்கள் என்று கோரிக்கை ஒன்றையும் முன்வைத்திருந்தார்
சாரதிகளுக்கான சில ஒழுக்க விதிகள்
வாகனம் நிறுத்த கூடாது என சொல்லப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தாதீர்கள்
வெய்யில் காலத்தில் சூரியன் தாழ் வானத்தில் நிற்கும் போது சரியாக கண் கூசும். கண்ணாடி பாவியுங்கள்.அப்போது தூசிகள் பூச்சிகள் உங்கள் கண்களை தாக்குவதிலிருந்து பாதுகாக்கும்
பாடசாலை சூழலில் வாகனத்தை அவதானமாக ஓடுங்கள். பாடசாலை சூழலில் மற்றைய வாகனங்களை முந்தி செல்லாதீர்கள்
பலமான காற்று மழை பனி கொட்டும் நேரங்களில் உங்கள் வாகனத்திற்கும் முன்னால் செல்கின்ற வாகனங்களிற்கும் இடையில் போதியளவு இடைவெளியை பேணுங்கள்.
நீங்கள் ஓடும் வாகனத்தில் உங்கள் பாதுகாப்பு வாகனத்தை முழுமையாக கட்டுப்படுத்தக்கூடிய சாரதி உங்களில் தங்கி உள்ளது.
வாகனம் ஓடும்போது திரும்புவதற்காக கைகளை வெளியே நீட்டி சைகை செய்யாதீர்கள் அது சிலவேளைகளில் ஆபத்தை விளைவிக்கும்
வாகனம் ஓடும் போது உங்கள் எதிரே விப்து ஏற்பட்டிருப்பதை பார்த்தால் உடனடியாக நிறுத்தி விபத்து ஏற்பட்டவர்களுக்கு முதலுதவிகள் செய்யுங்கள்
சீரான வேகத்தில் ஓடும் போது எரிபொருளை சேமிக்க முடியும். வேகமாக ஓடும் போது மேலதிகமாக எரிபொருள் தேவைப்படும்.
அவசியமானபோது என்ன செய்ய போகின்றீர்கள் என நீங்கள் சிக்னல் போட்டு காட்டாவிட்டால் மற்றைய வாகனங்களுடன் மோதி விபத்து ஏற்படலாம்.
வாகனத்தின் ரயர்களை அடிக்கடி பரிசோதித்து நல்ல நிலையில் வைக்கா விட்டால் விபத்துக்கள் ஏற்படலாம்.
பனி,ஈரம்,மழை தேங்கிய வீதிகளில் அளவில் பெரிய வாகனங்களை அண்மிக்கும் போது றipநசளஐ போட்டு கண்ணாடியூடான தெளிவான பார்வையை உறுதி செய்யுங்கள்.
மிகவும் முக்கியமாக நீங்கள் ஒரு விபத்தை ஏற்படுத்தி விட்டால் அங்கிருந்து தப்பிச் செல்லவாதீர்கள் ஒரு வேளை அவர்கள் சாதாரணமான காயங்கள் ஏற்பட்டிருந்தால் நீங்களே மருத்துவ மனைக்கு எடுத்து சென்று அவர்கள் உயிரை காப்பாற்றி விடலாம்
குடி போதையில் வாகனம் செலுத்தாதீர்கள் நீங்கள் ஒருவர் விடும் தவறுகளால் எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது எனவே மிகவும் அவதானமாக வானங்களை செலுத்துங்கள்
உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
No comments