Page Nav

HIDE

Breaking News:

latest

பண்டாரவன்னியன் சிலைமுன்பு சத்தியப்பிரமாணம் செய்த ஜனநாயக தேசிய கூட்டணி!

உள்ளுராட்சி சபை தேர்தலில் (2025) வெற்றி பெற்ற முக்கியமான இரண்டு கட்சிகளின் சத்தியப்பிரமாண  நிகழ்வு  நடைபெற்றுள்ளது அதனடிப்படையில்  ஜனநாயக தே...

உள்ளுராட்சி சபை தேர்தலில் (2025) வெற்றி பெற்ற முக்கியமான இரண்டு கட்சிகளின் சத்தியப்பிரமாண  நிகழ்வு  நடைபெற்றுள்ளது அதனடிப்படையில் 

ஜனநாயக தேசிய கூட்டணியின் சார்பில் வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவில் இன்று (2) மாலை இடம்பெற்றது.

வவுனியா மாவட்டசெயலக வளாகத்திற்குள் அமைந்துள்ள பண்டாரவன்னியன் நினைவுச்சிலைக்கு முன்பாக குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.


ஜனநாயக தேசிய கூட்டணியானது கடந்த தேர்தலில் வவுனியாவில் ஐந்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தது. 

மன்னார் மாவட்டத்தில் தள்ளாடி என்னும் வரலாற்றுப் பெயர் எவ்வாறு உருவானது கம்பராமாயணம்கூறும் விளக்கம்

கல் உப்பு உங்கள் கஷ்டங்களை கரைத்து வாழ்வை வளமாக்கும்-பிரபஞ்ச ஈர்ப்பு விதி

அந்தவகையில் வவுனியா மாநகரசபைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள பரமேஸ்வரன் கார்த்தீபன்,செட்டிகுளம் பிரதேசசபைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள சங்கரன் சசிக்குமார்,

இராசரத்தினம் லிங்கேஸ்வரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள வீரசிங்கம் ஶ்ரீதரன்,மற்றும் சதாநந்தம் சுகிர்தன் ஆகியோர் தமது சத்திய பிரமாணத்தை இன்று மேற்கொண்டனர்.

குறித்த சத்தியபிரமாண நிகழ்வு. சிறி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(சிறிரெலோ) செயலாளர் நாயகம் ப.உதயராசாவின் முன்னிலையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள், கலந்துகொண்டிருத்தனர்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி

இதே வேளை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் மன்னார் மாவட்டத்தில்  உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு மன்னாரில் இன்று (3)  இடம்பெற்றது.

தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட தலைமை அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் விகிதாசார உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது சத்திய பிரமாணத்தை மேற்கொண்டனர்.

மலையகத் தூண்கள்-மறைக்கப்பட்ட மலையக தோட்டத் தொழிலாளர்களின் வரலாறுகள்

இதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் சுயேட்சைக்குழு சார்பாக போட்டியிட்ட ஜி.எம்.சீலன் தலைமையிலான குழுவினரும் ஆதரவு தெரிவித்து வருகை தந்ததோடு அவர்களது உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.


சத்தியபிரமாண நிகழ்வில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஆர் குமரேஸ்,புளொட் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ஜேம்ஸ்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் ஜோன்சன்,சுயேட்சை குழுவின் தலைவர் ஜி.எம்.சீலன்,ஆகியோர் கலந்து கொண்டதோடு,அவர்கள் முன்னிலையில் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர்.

இதே வேளை  தமிழர் தாயக பிரதேசங்களில் அமைந்துள்ள  சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு  கூட்டணி பேச்சுவார்த்தைகள்  இழுபறி நிலைகளில் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 



No comments