TAMILVIYUGAM.COM,MANNAR REPORTER, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வ...
TAMILVIYUGAM.COM,MANNAR REPORTER,
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என மன்னார் மேலதிக நீதிவான் இன்று வியாழக்கிழமை (03-09-2026) தீர்ப்பளித்துள்ளார்.
சம்பவத்தின் பின்னணி கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பு பகுதியில் இலங்கை கடற்படை நடவடிக்கை காரணமாக எல்லை தாண்டி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் ஒரு இழுவைப் படகுடன் கைது செய்யப்பட்டனர். கைதான மீனவர்கள் viyugam news தலைமன்னார் கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நீதிமன்ற நடவடிக்கை மற்றும் விளக்கமறியல் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் வழக்கைப் பதிவு செய்து, மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர்.
இலங்கையில் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு உதவித்தொகை 500 இருந்து 600 உயர்வு
ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் வழக்கு விசாரணை இன்று மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, மேலதிக நீதிவான் பின்வரும் நிபந்தனைகளுடன் தீர்ப்பளித்தார்:
குற்றச்சாட்டுகள் 1 மற்றும் 2: மீனவர்களுக்கு 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றச்சாட்டு 3: ஒவ்வொரு மீனவருக்கும் தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மன்னார் புகையிரதக் கடவை ஊழியர்களுக்கு 8 மாதங்களாக ஊதியமில்லை
மீண்டும் கைதான மீனவருக்குக் கூடுதல் அபராதம்: ஏற்கனவே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு விடுதலையான ஒரு மீனவர், இரண்டாவது முறையாகவும் கைதானதால் அவருக்கு ரூ. 25,000 அபராதத்துடன் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
அபராதத் தொகைகள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து, 9 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
@tamilviyugam

No comments