TAMILVIYUGAM.COM கச்சதீவை மீளப் பெறும் எண்ணம் இல்லை இலங்கையுடன் சிறப்பாக உள்ள உறவை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை கைது நடவடிக்கையை தவிர்க்க ...
TAMILVIYUGAM.COM
கச்சதீவை மீளப் பெறும் எண்ணம் இல்லை இலங்கையுடன் சிறப்பாக உள்ள உறவை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை கைது நடவடிக்கையை தவிர்க்க இந்திய மீனவர்கள் இலங்கை கடலுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசு திட்டவட்டமாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது
2008-ஆம் ஆண்டு முதல் கச்சத்தீவை மீட்கக் கோரி தொடரப்பட்ட பல்வேறு மனுக்கள் மற்றும் வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரிக்கையில், இன்றைய தினம் (6/10/2026) மத்திய அரசு தனது வெளியுறவு கொள்கை மற்றும் தற்போதைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.
அதேசமயம், நீதிமன்றம் கடல் சூழல் மற்றும் மீனவர்களின் நிலை குறித்து இந்த முக்கியக் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளது.
அதனடிப்படையில் நீதிமன்றத்தின் கேள்விகளும் மத்திய அரசின் பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய ஒப்பந்தம் குறித்து மீண்டும் அந்நாட்டுடன் பேசினீர்களா? - உச்சநீதிமன்றம்
கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய ஒப்பந்தம் குறித்து பேச முயன்றோம், ஆனால் பிறகு திட்டத்தை கைவிட்டுவிட்டோம் இலங்கையுடன் சிறப்பாக உள்ள உறவை கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து பேசி கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை
மீன்வளத்தை தேடி இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் சென்றால் கைது செய்யத்தான் செய்வார்கள் கைது நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்றால் இந்திய மீனவர்கள் இலங்கை கடலுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் - மத்திய அரசு தெரிவித்துள்ளது
மேலும் இலங்கை கடல் பகுதி தூய்மையாக உள்ளதால் தான் மீன்வளம் அதிகமாக உள்ளது
இந்திய கடல் பகுதி அசுத்தமாக உள்ளதால் மீன்வளம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது
இந்திய பகுதியில் மீன்வளம் இல்லாததால் இலங்கை பகுதிக்குள் தமிழக மீனவர்கள் செல்கின்றனர்
இலங்கை மீனவர்கள் தங்கள் கடலை எவ்வளவு சுத்தமாக பராமரிக்கின்றனர் என என் கண்ணால் பார்த்துள்ளேன் என்று நீதிபதி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்
@tamilviyugam

No comments