Page Nav

HIDE

Breaking News:

latest

வட மாகாண TEAKWONDO சாம்பியன்ஷிப் போட்டியில் மன்னார் மாணவி பபிஷனா சாதனை

TAMILVIYUGAM.COM,13/9/2026 வட மாகாண அளவிலான TEAKWONDO சாம்பியன்ஷிப் போட்டிகள் மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அர...

TAMILVIYUGAM.COM,13/9/2026

வட மாகாண அளவிலான TEAKWONDO சாம்பியன்ஷிப் போட்டிகள் மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் நேற்றைய தினம் (12/9/2026) மிக விமரிசையாக நடைபெற்றன. 

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த ஏராளமான வீர வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்த இப்போட்டியில் பங்கேற்றனர்.

மோகினி நீர்வீழ்ச்சி அருகே கவிழ்ந்த கார்

மன்னார் ஆண்டான்குளம் பாடசாலை (Mannar Andankulam School)

இப்போட்டியில் மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, மன்/ ஆண்டான்குளம் பாடசாலையைச் சேர்ந்த 17 வயதுடைய பபிஷனா என்ற வீராங்கனை கலந்துகொண்டார். வட மாகாண அளவிலான போட்டி ஒன்றில் இவர் முதன்முறையாகப் பங்கேற்றபோதிலும், எவ்வித அச்சமும் இன்றி மிகத் துணிச்சலுடன் களமிறங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

73 கிலோ எடைப் பிரிவு (73kg Category)

பபிஷனா 73 கிலோ எடைப் பிரிவில்  , எதிர்த்துப் போட்டியிட்ட வீரர்களை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்து Viyugam News  சாதனை படைத்துள்ளார். தான் பங்கேற்ற முதல் போட்டியிலேயே இத்தகைய பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தி மன்னார் மாவட்டத்திற்குப் பெருமை தேடித்தந்துள்ளார்.

மன்னார் விளையாட்டுச் சாதனை (Mannar Sports Achievement)

சாதனை படைத்த வீராங்கனை பபிஷனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரை திறம்பட பயிற்றுவித்து வழிநடத்திய பயிற்றுனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறோம் இவருடைய விளையாட்டுச் சாதனைப் பயணம் மேலும் பல உயரங்களைத் தொட்டுத் தொடர மாவட்ட மற்றும் பாடசாலை சமூகத்தினர்  வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரித்துக் கொள்கின்றார்கள் 

@tamailviyugam

No comments