Page Nav

HIDE

Breaking News:

latest

அனோஜனை விடுதலை செய்யக் கோரி இலங்கையின் பல இடங்களில் கவனயீர்ப்புப் போராட்டம்

TAMILVIYUGAM.COM,20/9/2026 சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் அவ...

TAMILVIYUGAM.COM,20/9/2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் அவரது மரண தண்டனையைக் குறைத்துக் கருணை வழங்குமாறு வலியுறுத்தியும் இலங்கையின் பல பகுதிகளிலும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது Viyugam News

மனிதாபிமான வேண்டுகோள்" எனும் தலைப்பில் அட்டன் மல்லியப்பு சந்தியில் இந்து அமைப்புகளின் ஒன்றியத்தினால் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மன்னாரில் சிறுவர் பாதுகாப்பு

மேன்முறையீட்டு விசாரணையிலும் அனோஜனுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஏராளமானோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு சிவராசா அனோஜனின் உருவம் தாங்கிய பதாகைகளையும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியவாறு தமது எதிர்ப்பையும் மனிதாபிமானக் கோரிக்கையையும் வெளிப்படுத்தினர்.

நற்பிட்டிமுனையில் கையெழுத்து சேகரிப்பும் கவனயீர்ப்பு போராட்டமும்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞன் அனோஜனின் உயிரைப் காப்பாற்றுவதற்காக இனம் மதம் மொழி என அனைத்து எல்லைகளையும் கடந்து மனிதாபிமான அடிப்படையில்  கையெழுத்து சேகரிப்பும் கவனயீர்ப்பு போராட்டமும் நற்பிட்டிமுனையில் நடத்தப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை 9 மணி முதல் நற்பிட்டிமுனை முதலாம் கட்டை சந்தியில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

அனோஜனின் விடுதலைக்கான நீதியை வலியுறுத்தியும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் நடைபெறும் இப்போராட்டத்தில் பிரதேச பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் எனப் பெருந்திரளானோர் கட்சி மத பேதமின்றி பங்கேற்றுத் தங்களது கையெழுத்துக்களைப் பதிவிட்டு ஆதரவுக் கரங்களை நீட்டி வருகின்றனர்.

இதே நேரம் நேற்றைய தினம் இந்து மத அமைப்பு ஒன்றினால் மட்டக்களப்பு காந்தி பூங்கா பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது  

மத அடிப்படையிலான முக நூல் விவாதம் ஒன்றில் பின்னூட்டம் இட்டதற்காகவே  சவுதி  பொலிசாரினால் அனோஜன் கைது செய்யப்பட்டு  இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

@tamilviyugam


No comments