TAMILVIYUGAM.COM,15/9/2026 தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், முகநூல் (Facebook) மூலம் அறிமுகமான இலங்கைச் சிற...
TAMILVIYUGAM.COM,15/9/2026
தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், முகநூல் (Facebook) மூலம் அறிமுகமான இலங்கைச் சிறுமியைச் சந்திப்பதற்காக இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கை வந்து தலைமன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகநூல் காதல் (Facebook Love) VIYUGAM NEWS
தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், முகநூல் மூலம் அறிமுகமான இலங்கை காதலியை சந்திப்பதற்காக இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கை சிறுவனை ஏற்றி வந்த படகோட்டிகள் தலைமன்னார் மணல்திட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனர்
இந்திய சிறுவன் கைது (Indian Boy Arrested)
அச்சிறுவன், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் உள்ள மணல் திட்டுக்களில் இலங்கையின் எல்லைக்குள் நின்றபோது இலங்கை கடற்படையினரால் அவதானிக்கப்பட்டு மீட்கப்பட்டார்.
கச்சதீவுக்கு பதிலாக இலங்கை வழங்கிய வாஜ்பேங் வளமிக்க கடல் பகுதி தொடர்பில் தெரிந்து கொள்ளுங்கள்-ஜெகன்
பின்னர் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காகத் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
படகில் இலங்கை வருவதற்கான பணம் இல்லாததால், படகோட்டியிடம் தனது தங்கச் சங்கிலியை அச்சிறுவன் கட்டணமாக வழங்கியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் 280 இந்திய ரூபாய் மட்டுமே இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளம் பெண்களே இந்த காணொளி உங்களுக்காகத்தான் ஒரு நிமிடம் ஒதுக்கிப் பாருங்கள்
மன்னார் நீதிமன்றம் (Mannar Court)
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அச்சிறுவனை, சிறுவர் காப்பகத்தில் தடுத்து வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் அச்சிறுவன் சந்திக்க வந்த அந்த இலங்கை முகநூல் காதலி யார்? அவர் பொலிஸாரிடம் சிக்குவாரா? பொறுத்திருங்கள் தகவல் கிடைத்தவுடன் விரைவில் அறியத் தருகிறோம்
@tamilviyugam


No comments