Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் மாவட்டத்தில் 4 இடங்களில் பார்த்தீனியம் அடையாளம் காணப்பட்டுள்ளது மன்னார் மாவட்டச் செயலாளர்

மன்னார் மாவட்டத்தில் 4 இடங்கள் பார்த்தீனியம் அடையாளம் காணப்பட்டுள்ளது அவற்றில்  அதிகமாக உள்ள இடங்கள் அடையாளம்  காணப்பட்டுள்ளதோடு அவற்றில் ஒழ...

மன்னார் மாவட்டத்தில் 4 இடங்கள் பார்த்தீனியம் அடையாளம் காணப்பட்டுள்ளது அவற்றில்  அதிகமாக உள்ள இடங்கள் அடையாளம்  காணப்பட்டுள்ளதோடு அவற்றில் ஒழிப்பு நடவடிக்கையை துரிதமாக ஆரம்பிப்பதாகவும் மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார் 

பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கை கலந்துரையாடல்

பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (11.06.2025) நடைபெற்றது ஒவ்வொரு மாவட்டத்தின் நிலமைகள் தொடர்பில் குறித்த மாவட்டத்திகுரிய தகவல்களை சூம் செயலிகள் ஊடாக தெரிவித்தனர் அப்போது மன்னார் மாவட்ட நிலமைகள் தொடர்பில் மன்னார் மாவட்டச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையை ஓரிருநாள்கள் மாத்திரம் முன்னெடுக்க முடியாது. தொடர்ச்சியாக சகல திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். மக்களுக்கு போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் சட்டநடவடிக்கையை தீவிரமாக முன்னெடுக்குமாறு பணித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள்இ இதனை நாளையிலிருந்தே ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தினார்.

வடக்குமாகாண ஆளுநர் திரு.வேதநாயகம் அவர்கள் 

ஆளுநர் தனது ஆரம்ப உரையில் அலுவலர்களை களத்துக்குச் சென்று பணியாற்றுமாறு திரும்பத் திரும்பக் கூறிவருகின்றபோதும் அலுவலகத்திலிருந்தே திட்டங்களை தயாரிக்கின்றனர். அதேபோல ஒரு விடயத்தைக் குறிப்பிட்டால் அதன் முன்னேற்றத்தை தொடர்ந்து கவனிக்கின்றதன்மையும் இல்லை. அரசாங்கத்தின் ஊடாக எமது மக்களுக்கான அபிவிருத்திகளைச் செய்வதற்கு சாதகமான சூழல் இருக்கின்றது. அதைப் பயன்படுத்தி மக்களுக்கு எதையாவது பெற்றுக்கொடுக்க முயற்சிக்கவேண்டும்.


 வீதி ஊரங்களிலேயே பார்த்தீனியம் 

பெரும்பாலான வீதிகளின் ஓரங்களில் பார்த்தீனியம் செடி காணப்படுகின்றது. பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதுடன் விரைவாக அதைச் செயற்படுத்த வேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். 

பிரதம செயலாளர்

பிரதம செயலாளர் இது தொடர்பான சட்ட ஏற்பாடுகளைக் குறிப்பிட்டதுடன் அதற்கு அமைவாக வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும் அதனுடன் தொடர்புடைய 12 திணைக்களங்களையும் இதில் இணைத்துக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார். அத்துடன் சட்டநடவடிக்கை எடுப்பதற்குரிய அலுவலர்களுக்கான அடையாள அட்டையையும் விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும்இ வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளரால் பார்த்தீனியம் ஒழிப்புக்குரிய நடவடிக்கை திட்டம் தயாரிக்கப்பட்டு சகல திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதை துரிதமாக நடைமுறைப்படுத்த சகலரும் ஒத்துழைக்கவேண்டும் எனவும் கோரினார். 

வடக்கு உள்ளுராட்சி ஆணையாளர்

வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஒவ்வொரு அரச திணைக்களங்களும் தமக்குரிய இடங்களில் பார்த்தீனிய ஒழிப்பை முதலில் முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் போன்று இதற்கும் ஒரு வாரத்தைச் செயற்படுத்தலாம் என யோசனை முன்வைத்தார். இதன்போது குறிப்பிட்ட ஆளுநர்இ மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு ஒரு வாரத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் அந்த வாரத்தில் மாத்திரம் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். 

பாதுகாப்பு முக்கியம் 

பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்போது நிச்சயம் பாதுகாப்பான கையுறை மற்றும் முகக் கவசம் அணிந்து செய்யவேண்டும் என யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார். 

மாவட்டச் செயலாளர்களுடனான கலந்துரையாடல்:இதன் பின்னர் சூம் ஊடாக இணைந்து கொண்ட மாவட்டச் செயலர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

மன்னார் 

மன்னார் மாவட்டச் செயலர்  மன்னார் மாவட்டத்தில் 4 இடங்கள் பார்த்தீனியம் அதிகமாக உள்ள இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவற்றில் ஒழிப்பு நடவடிக்கையை துரிதமாக ஆரம்பிப்பதாகவும் குறிப்பிட்டார். 

கிளிநொச்சி

அதேபோல கிளிநொச்சி மாவட்டச் செயலர்இ கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவில் வீதியோரங்களிலேயே அதிகளவு காணப்படுகின்றன என்றும் சம்பந்தப்பட்ட வீதிக்குரிய திணைக்களம் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு

அதேபோல பொதுமக்களுக்குரிய தனியார் காணிகளில் கிராம அலுவலர்கள் ஊடாக அறிவுறுத்தல் வழங்கி நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலர்களும் தமது பிரதேசங்களில் பார்த்தீனியம் அதிகமாக உள்ள இடங்கள் அடையாளப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். 

சட்ட நடவடிக்கை 

மேலும் அனைத்து மாவட்டச் செயலர்களும் சட்டநடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனக் குறிப்பிட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர்இ சட்டநடவடிக்கைக்கு முன்னர் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி அதன் பின்னர் சட்டநடவடிக்கையை ஆரம்பிப்போம் என்று குறிப்பிட்டார். 

மக்களின் காணிகளுக்கு எச்சரிக்கை

இதன்போது விவசாயத் திணைக்களத்தால் கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விவரிக்கப்பட்டது. மேலும் மக்களின் காணிகளில் பார்த்தீனியம் காணப்படுமாக இருந்தால் வெள்ளை அறிவித்தல் தொடர்ந்து மஞ்சள் அறிவித்தல் இறுதியாக சிவப்பு அறிவித்தல் காட்சிப்படுத்தியே சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டனர். மேலும் களைநாசினிகள் ஊடாக பார்த்தீனியத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் அதனைப் பயன்படுத்துவதால் மண் வளம்இ நிலத்தடி நீர்ப்பாதிப்பு உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. 

கைவிடப்பட்ட காணிகள் தொடர்பில் 

கைவிடப்பட்ட தனியார் காணிகளில் பிரதேச சபையின் ஊடாக பார்த்தீனியத்தை அகற்றுவது என்றும் அதற்குரிய கட்டணத்தை சோலைவரியுடன் இணைந்து அறவிடமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

தொடர் நடவடிக்கை தேவை

பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையை கடந்த காலங்களைப்போன்று குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மாத்திரம் முன்னெடுக்காமல் தொடர்ந்து 4 – 5 வருடங்களுக்கு முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்திய ஆளுநர் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களின் காணிகளில் உள்ள பார்த்தீனியத்தை ஒழிப்பது அரச திணைக்களங்கள் தமக்குரிய ஆதனங்களில் பார்த்தீனியத்தை ஒழிப்பது என அனைத்தும் சமநேரத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

 மேலும் மாவட்டச் செயலர்கள் மற்றும் பிரதேச செயலர்கள் தமது பிரதேச மற்றும் மாவட்ட மட்டக் கூட்டங்களில் கலந்துரையாடி தொடர் நடவடிக்கை முன்னெடுக்கவேண்டும் எனவும்இ பிரதம செயலாளர் மாதாந்தம் முன்னேற்றத்தை ஆராயவேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார். 

கூட்டத்தில் பங்குபற்றியோர் 

இந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்,வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளர்,யாழ்ப்பாணத்தின் அனைத்துப் பிரதேச செயலாளர்களும்,பிரதேச சபைச் செயலாளர்களும்,யாழ். மாநகர சபை ஆணையாளர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கமநலசேவைகள் திணைக்களத்தினர்,ஆகியோர் நேரிலும் மாவட்டச் செயலாளர்கள் சூம் ஊடாகவும் இணைந்து கொண்டனர். 


No comments