Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னாரில் கோலாகலமாகத் தொடங்கியது உலக சுற்றுலா தின விழா

TAMILVIYUGAM.COM உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்டமான உலக சுற்றுலா தினம் மற்றும் உணவுத் திருவிழாவ...

TAMILVIYUGAM.COM

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்டமான உலக சுற்றுலா தினம் மற்றும் உணவுத் திருவிழாவின் முதலாம் நாள் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை (25-09-2026) மாலை மன்னார் உப்புக்குளம் அல்பத்தா விளையாட்டு மைதானத்தில் மிக விமர்சையாகவும் கோலாகலமாகவும் ஆரம்பமானது.

மன்னார் விஷேட செய்தியாளர்

வடக்கு மாகாண சுற்றுலா பணியகம், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண தொழில்துறை மன்றம் ஆகியன இணைந்தே இப் பிரம்மாண்ட விழாவினை ஏற்பாடு செய்துள்ளன.

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இவ் ஆரம்ப விழாவில், வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் முதன்மைச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

மேலும், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்வேறு அரச திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர்.

நிகழ்வின் தொடக்கத்தில், வருகை தந்த வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் உள்ளூர் பாரம்பரிய உணவு உற்பத்திகள், கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரியப் பொருட்களின் கண்காட்சிச் சடங்குகளைப் பார்வையிட்டுத் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை, கலாசார மற்றும் மேடை நிகழ்வுகளிலும் அவர்கள் கலந்துகொண்டனர்.

மன்னார் கீரி கடற்கரையில் நடத்தப்படவிருந்த இந் நிகழ்வு, அப்பகுதியில் நிலவிய கடும் காற்று காரணமாகப் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி மன்னார் உப்புக்குளம் அல் பதாஹ் விளையாட்டு மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும், விழா அரங்கில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மிக உற்சாகத்துடன் நிகழ்வுகளைக் கண்டு களித்தனர்.

இவ் உலக சுற்றுலா தின மற்றும் உணவுத் திருவிழாவின் தொடர்ச்சி நிகழ்வுகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை உப்புக்குளம் அல் பதாஹ் விளையாட்டு மைதானத்தில் தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments