TAMILVIYUGAM.COM இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி மேற்கொள்வதை நாங்கள் எக்காலத்திலும் அனுமதிக்...
TAMILVIYUGAM.COM
இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி மேற்கொள்வதை நாங்கள் எக்காலத்திலும் அனுமதிக்க மாட்டோம் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம்
இலங்கை இந்திய மீனவர்களுடைய விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்க இருக்கின்ற பேச்சுவார்த்தை தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக கடற் தொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (8) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
கடந்த திங்கட்கிழமை கடற்றொழில் அமைச்சர் அவர்களை சந்தித்தோம். இணையம் என்ற ரீதியில் இணையத்துடன் இணைந்து பணியாற்றுகின்ற தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், அதேபோன்று தேசிய மீனவ தொழிற்சங்கம் போன்ற பிரதிநிதிகள் இலங்கை தேசிய அளவில் தொழிற்படுகின்ற மீனவ பிரதிநிதிகளை கொண்டு நாங்கள் சந்திப்பொன்றை மேற் கொண்டிருந்தோம்.
அந்த வகையில் அமைச்சருடன் சுமார் ஒன்றரை மணி நேரம் நாங்கள் கலந்துரையாடிய விடயங்களில் 6 விடயங்களை மையப்படுத்தி பேசியிருந்தோம். முதலாவதாக நாங்கள் இந்திய மீனவர்களுடைய தற்போது அதிகாரிகள் மட்டத்திலான முன்னெடுக்க விருக்கின்ற பேச்சுவார்த்தை தொடர்பாக அரசின் நிலைப்பாடு, அதுபோன்று எங்களது நிலைப்பாடும் எங்களது கருத்துக்களையும் நாங்கள் அமைச்சருடன் பகிர்ந்து கொண்டோம்.
அமைச்சரின் கருத்தில் ஒன்றைத் தெளிவாக கூறியிருந்தார்: "இந்த நடைபெறுகின்ற அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை, அதற்குப் பின்னர் மீனவர் மத்தியிலே ஒரு பேச்சுவார்த்தையும், அதற்குப் பின்னர் அமைச்சு மட்டத்தில் அரசு மட்டத்திலான பேச்சுவார்த்தையாக நாங்கள் நடத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்" என்று.
முதற்கட்டமாக அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையில் என்ன பேச போகிறார்கள் என்ற எங்களுடைய கேள்விக்கான பதிலாக, அமைச்சர் கூறியிருந்தார்: "அதிகாரிகள் மட்டத்தில் நாங்கள் மீன் வளங்களை பாதுகாப்பதும், கடல் சூழலை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், ஏனைய மீன்பிடி நடவடிக்கைகளில் ஏற்படுகின்ற இலங்கையில் காணப்படுகின்ற வளங்களின் பாதுகாப்பு தொடர்பாக நாங்கள் அவர்களோடு கதைத்திருக்கின்றோம்.
இந்த விடயத்திலே இரு நாட்டு மீனவர்களின் இருக்கின்ற ஏனைய பிரச்சினைகளை மீனவர்கள் மத்தியிலே பேசுவதற்கு நாங்கள் அதனை ஒதுக்கி வைத்திருக்கின்றோம்.
எனவே, இது அதிகாரிகள் மட்டத்திலான பேச்சிலே எந்தவிதமான இலங்கையின் எந்தவொரு நகர்வும் இலங்கை மீனவர்களுக்கோ, வடக்கு மீனவர்களுக்கோ எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது" என்ற கருத்தை அவர் முன்வைத்திருந்தார்.
நாங்களும் எங்களது நிலைப்பாட்டை தெளிவாகச் சொல்லியிருந்தோம்: "எது எவ்வாறாயினும், எமது இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன் பிடியை மேற்கொள்வதை நாங்கள் எக்காலமும் அனுமதிப்பதாக இல்லை" என்ற கருத்தை தெளிவாக கூறியிருக்கின்றோம்.
வடக்கு மீனவர் அமைப்பானது (வடமாகாண கடற்றொழிலாளர் இணையம்) இதற்காக பாரிய பங்களிப்பைக் கடந்த ஆண்டுகளிலே செய்திருக்கின்றது என்பதை அனைவரும் அறிவர். எனவே, அந்த வகையில் எங்களோடு இணைந்து எங்களுக்கு அப்பாற்பட்டும் பல அமைப்புகள் வடக்கு மீனவர்கள் சார்ந்தும், இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான இந்த அத்துமீறல்கள் தொடர்பிலும் தொடர்ந்து பேசுகின்றார்கள்.
அதன் ஒரு வெற்றிகரமான ஒரு செயற்பாட்டின் தீர்வாக, கடந்த 6ஆம் திகதி இந்திய உச்ச நீதிமன்றத்திலே நடந்திருக்கின்ற அந்த விவாதங்களும், அதற்குள் எடுத்திருக்கின்ற அந்த உச்ச நீதிமன்ற நீதிபதி அவர்களின் கருத்தையும் பார்க்கும்போது உண்மையிலேயே மனம் சந்தோஷமடைகின்றது.
நாங்கள் எடுத்த இவ்வாறான பல ஆண்டுகளாக நாங்கள் போராடிய பல விடயங்களில் ஒரு சந்தோஷப்பட கூடிய செய்தியை நாங்கள் அங்கே கேட்டிருந்தோம்.இலங்கை மீனவர்கள் சார்பாக பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஏனெனில், வடபகுதியில் குறிப்பாக இலங்கையில் கடல் வளங்களைப் பேணுவதில் இந்த வடக்கு மீனவர்கள் தங்களாலான முழு பங்களிப்பைச் செய்திருக்கின்றார்கள்.
கடலைச் சுத்தமாகப் பேணுவதிலும், கூடுமானவரை தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைக் கூட தவிர்த்துக் கொண்டு அங்கு செயற்பாடுகளை இந்தக்கடலிலே மேற்கொள்கின்றார்கள்.
ஆனால், இந்திய மீனவர்கள் இந்தக் கடலிலே அத்துமீறி நுழைந்து, இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து சட்டவிரோதமான மீன்பிடியை மேற்கொள்வதோடு அல்லாமல், கடலைச் சுற்றுச்சூழல் சூழலை முற்றுமுழுதாக அளித்திருக்கிறார்கள்.
இதனைச் சீர் செய்வதற்கு எங்களுக்கு நீண்ட காலம் கூட எடுக்கலாம் .எது எவ்வாறாயினும், அங்கு நடைபெற்ற விடயங்களை நாங்கள் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருப்பதால், அங்கு அந்த நீதிமன்றத்திலே இந்தியச் சார்பு ஒரு தெளிவான கருத்தைச் சொல்லியிருக்கின்றது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அதேபோன்று திராவிட முன்னேற்றக் கழகங்கள் சார்ந்த அந்த கச்சத்தீவு சார்ந்த மீனவர் அமைப்புகள் 2008 தொடக்கம் தொடரப்பட்ட அந்த கச்சத்தீவு ஏனைய விடயங்கள் தொடர்பான வழக்கின் தொகுப்பாக அந்த நீதிமன்றத்திலே அந்தச் செயற்பாடு நடைபெற்றிருக்கின்றது.
அந்த நடைமுறையில், அந்த விவாதத்தில் இந்திய மத்திய அரசு ஒரு தெளிவான விதியைச் சொல்லியிருக்கிறது: "நாங்கள் இந்தக் கச்சத்தீவு தொடர்பான விடயமாக நாங்கள் இனிமேல் இதனைையாளப் போவதில்லை, அது இலங்கைக்குரியது" என்பதை அந்த கருத்துப்பட அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.
எனவே, ஒரு ஆறுதலான விடயம் இனி கச்சத்தீவு தொடர்பாக எது எவ்வாறாயினும், இந்த கச்சத்தீவு தொடர்பாக அந்த நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் திரும்ப வரவழைக்க வேண்டும். அதற்கு நீதிபதி அவர்களின் கருத்தும் எமது மீனவர்களைச் சந்தோஷப்படுத்துகிறது. எனவே, இந்த கடல் சூழலை அவர்கள் கண்ணியமாகவும் துப்புரவாகவும் பாதுகாக்கின்றார்கள்.
எனவேதான் அங்கு மீன் வளங்களும் அந்த மீன் உற்பத்தியும் அங்கு இடம்பெறுகின்றது. "நீங்கள் அசுத்தமாகக் கடலை வைத்திருப்பதால் இவ்வாறான செயற்பாட்டை இனி நீங்கள் முன்னெடுக்க வேண்டாம்" என்ற கருத்தை அவர் பதிவு செய்திருக்கிறார்.

No comments