TAMILVIYUGAM.COM வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை தமிழ் தேசிய கலை மற்றும் சமூக செயற்பாட்டாளருமான வனிதா சேனாதிராஜா கடந்த 23ம் திகதி மி...
TAMILVIYUGAM.COM
பொலிசார் இதை தவறான முடிவு என்று கூறினாலும் பலர் அதை ஏற்க மறுக்கிறார்கள் ஆசிரியை வனிதா தொடர்பாக அவரது நண்பர்கள் மற்றும் சக செயற்பாட்டாளர்களால் மிகவும் கண்ணியமானவராகவும் நேர்மையானவராகவும் மதிக்கப்பட்ட இவரது திடீர் மரணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு ஈழத்தமிழர் உரிமைகள் பெரு மன்று' அமைப்பின் செயலாளராக இருந்து திருகோணமலை பிரகடன வெளியீட்டில் முக்கிய பங்காற்றியவர் இவர்.
இவர் இறப்பதற்கு முன்பு செப்- 22 காலை 8:05 மணிக்கு "ஆணிகளைத் தயாராய் வைத்துக் கொண்டு ஏன் கேட்கிறாய் அன்பே சாப்பிட்டாயா?" என்ற கவிதையைப் பதிவிட்டு பின்னர் மதியம் 1:38 மணிக்கு அதை எடிட் செய்துள்ளமை ஏன் என்ற கேள்வியும் பலரிடம் எழுந்துள்ளது
இந்த ம(ர)ணம் கொ(லை)யா அல்லது தற்(கொ(லை)யா என்ற மர்மத்தை இலங்கை பிரதமரும் மகளிர் விவகார அமைச்சும் பெண்கள் என்ற ரீதியில் நேர்மையாக தாமதிக்காமல் முழுமையான விசாரணை மூலம் வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஏன் என்றால் தற்போது வனிதா அவர்களின் துயர சம்பவசம் தனிப்பட்ட காரணங்களால் நிகழ்ந்ததாக இருந்தாலும் சமூகப் பணிகளுக்காக திட்டமிடப்பட்டதாக இருந்தாலும் இது போன்ற சம்பவங்களின் உண்மைத் தன்மைகளை வெளிப் படுத்ததாமல் மூடி மறைக்கும் போது எதிர்காலத்தில் பெண்கள் அரசியல் சமூக சேவைகளில் ஈடுபடுவதற்கு தடையாகி விடும்
எது எப்படியோ வனிதா அவர்களின் துன்பியல் சம்பவத்திற்கான உண்மைத் தண்மைகளை விரைவாக கண்டறிந்து வெளிப்படுத்த வேண்டும் சமூகத்தில் பெண்கள் மத்தியில் எழுந்துள்ள அச்ச நிலையை போக்க வேண்டும் என்னபது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
@tamilviyugam


No comments