Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னாரில் அணிதிரண்ட இளைஞர்கள் மாந்தை மேற்கில் பிரம்மாண்ட மோட்டார் சைக்கிள் பேரணி

TAMILVIYUGAM.COM நாட்டை கட்டியெழுப்பும் இளைஞர் சக்தி' என்ற தொனிப்பொருளில், நாடு தழுவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சோசலிச இளைஞ...

TAMILVIYUGAM.COM

நாட்டை கட்டியெழுப்பும் இளைஞர் சக்தி' என்ற தொனிப்பொருளில், நாடு தழுவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சோசலிச இளைஞர் சங்கத்தால் இளைஞர்களை ஒழுங்குபடுத்தி, நாட்டிற்கு தேவையான இளம் தலைமுறையை வெளிக்கொண்டுவரும் பாரிய செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக, வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் முதன்முறையாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் வரும் அக்டோபர் 4-ஆம் தேதி பிரம்மாண்ட இளைஞர் மாநாடு நடைபெறவுள்ளது. 

அடம்பன் பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கான முதற்கட்ட பிரச்சாரப் பணியாக, இன்று (28) திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் மாந்தை மேற்கில் எழுச்சிமிக்க மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட திரளான இளைஞர்களும் யுவதிகளும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

அடம்பன் பகுதியில் தொடங்கிய இந்த பேரணி ஆண்டாங்குளம், வட்டக்கண்டல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கிராமங்கள் வழியாகச் சென்றது. 

எதிர்வரும் அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சோசலிச இளைஞர் சங்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து இளைஞர், யுவதிகளையும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.


No comments