TAMILVIYUGAM.COM,29/9/2029 மன்னார் மாவட்டத்தில் உணவகங்களின் உணவுத் தரம் மற்றும் சுகாதாரம் குறித்த கேள்விகளையும், பொதுமக்கள் மத்தியில் பெரும்...
TAMILVIYUGAM.COM,29/9/2029
மன்னார் மாவட்டத்தில் உணவகங்களின் உணவுத் தரம் மற்றும் சுகாதாரம் குறித்த கேள்விகளையும், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மூன்றாம்பிட்டி பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் நபர் ஒருவர் வாங்கிய வடையில் வெட்டுக்கிளி ஒன்று பொரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வடையை உட்கொள்ள முற்பட்ட வேளையிலேயே வடையின் நடுவே வெட்டுக்கிளி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக, நேற்று முன்தினம் மன்னார் நகர்ப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட முட்டை ரொட்டியில் கூர்மையான இரும்புக் கம்பித் துண்டு ஒன்று காணப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அந்தச் சம்பவம் தொடர்பான வடு மாறுவதற்குள்ளேயே, தற்போது மூன்றாம்பிட்டியில் வடையில் வெட்டுக்கிளி கண்டெடுக்கப்பட்டுள்ளமை மன்னார் மாவட்ட மக்களிடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.
உணவகங்களின் இத்தகைய அலட்சியப்போக்கு பொதுமக்களின் உயிருடன் விளையாடும் செயலாக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, இவ்விடயம் தொடர்பில் மாந்தை மேற்கு பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரும், மாவட்ட சுகாதார அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட உணவகங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
@tamilviyugamk


No comments