Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னாரில் வளர்ந்து வரும் சிறந்த நாட்டியத் தாரகை நயிலிஷா

TAMILVIYUGAM.COM,29/9/2026 மன்னார் பெரியகமம் பகுதியை சேர்ந்த நவநீதராஜன் லூட்ஸ் மேரி ஜான்ரினி தம்பதியினரின் தவப்புதல்வி நயிலிஷா . சிறு வயது ...

TAMILVIYUGAM.COM,29/9/2026

மன்னார் பெரியகமம் பகுதியை சேர்ந்த நவநீதராஜன் லூட்ஸ் மேரி ஜான்ரினி தம்பதியினரின் தவப்புதல்வி நயிலிஷா. சிறு வயது முதலே பரதநாட்டியக்கலையின் மீது மிகுந்த பற்றும் ஆர்வமும் கொண்டு தன் சலங்கையின் ஒலியால் நம் அனைவரையும் கட்டிப் போடும் திறமை படைத்தவர்

ஐந்து வயதில் ஆரம்பித்த நடனக்கலை தற்போது தரம் நான்கில் கல்வி கற்கும் போதே சாதனைப் பெண்மணியாக திகழவைத்துள்ளது. 

கடந்த 14 ம் தேதி ஆனி மாதம் கொழும்பு காலி முகத்திடலில் இடம் பெற்ற உலக சாதனை நடனப் போட்டியில் பங்கு பற்றி சாதனைப் படைத்துள்ளார். 

இதன் மூலம் இவர்கல்வி பயின்று வரும் மன்னார் டிலாசால் கல்லூரி பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்

பாவத்தின் உணர்ச்சிகளையும், இராகத்தின் நயத்தையும், தாளத்தில் துல்லியத்தையும் காட்டி மேடையில் இவர் ஆடும் ஒவ்வொரு அசைவும் பார்ப்பவர்களை மெய் மறக்கச் செய்யும் 

 அதே போல் தான் கடந்த  25.26.27. ஆகிய நாட்களில் மன்னார் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்ற உலக சுற்றுலா தினம் மற்றும்  உணவுத் திருவிழா நிகழ்வில்  நடனமாடி  அனைவரையும் விக்க வைத்தார்

தன் கலைப் பயணத்தில் மேலும் பல சிகரங்களை எட்டக் காத்திருக்கும் இத் திறமைமிகு மாணவி நயிலிஷாக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நம் மன்னார் மாவட்டம் பெருமை கொள்கின்றது.

@tamilviyugam

No comments