TAMILVIYUGAM.COM தலைமன்னாரில் இருந்து ராமர் பால மணல் திட்டுகளைப் பார்வையிடுவதற்கான விசேட படகு சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை முத...
TAMILVIYUGAM.COM
தலைமன்னாரில் இருந்து ராமர் பால மணல் திட்டுகளைப் பார்வையிடுவதற்கான விசேட படகு சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
உலக சுற்றுலா தின விழாவையொட்டி மன்னார் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார்,
இது தொடர்பான வெள்ளோட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், இறுதி தீர்மானத்திற்கான விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் திணைக்கள தலைவர்கள், தலைமன்னார் பங்குத்தந்தை மற்றும் கிராம மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
படகு சேவை
பயணக் கட்டணம்: ஒரு படகில் பயணிக்கும் 7 சுற்றுலா பயணிகளிடமிருந்து தலா 2,500 ரூபாய் வீதம் ஒரு படகுக்கு மொத்தம் 17,500 ரூபாய் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசு சேவைக் கட்டணம்: வனஜீவராசிகள் திணைக்களம் பயணிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் 140 ரூபாய் கட்டணமாக அறவிடும்.
பார்வையிடும் பகுதிகள்: தற்போதைய 17,500 ரூபாய் கட்டணத்தின் மூலம் இலங்கைக்குச் சொந்தமான 5 மணல் தீவுகள் வரை சென்று பார்வையிட முடியும்.
ராமர் பாலம்,
சிறப்பு அம்சங்கள்: பயணிகள் 3 ஆம் மணல் தீவில் இறங்கி, குறிப்பிட்ட நேரம் தங்கியிருந்து பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், முதலாவது மணல் தீவில் சுற்றுலா பயணிகள் நீச்சல் உள்ளிட்ட பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன (இதற்கான மேலதிக கட்டணங்கள் விரைவில் அறிவிக்கப்படும்).
சுற்றுலா பயணிகள் மேலாண்மைக் குழுவைத் தொடர்பு கொண்டு தங்களுக்கான பயணப் பதிவுகளை மேற்கொண்டு, மன்னார் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
@tamilviyugam


No comments