Page Nav

HIDE

Breaking News:

latest

உங்கள் தேசிய அடையாள அட்டையில் பெயர் முகவரி மாற்றம் செய்ய வேண்டுமா? விரிவான விளக்கம்

TAMILVIYUGAM.COM உங்களுடைய தேசிய அடையாள அட்டையில் ஏதாவது மாற்றத்தை கொண்டுவர வேண்டும் உங்களுடைய பெயர் அழிந்திருக்கிறது அல்லது உங்களுடைய முகவர...

TAMILVIYUGAM.COM

உங்களுடைய தேசிய அடையாள அட்டையில் ஏதாவது மாற்றத்தை கொண்டுவர வேண்டும் உங்களுடைய பெயர் அழிந்திருக்கிறது அல்லது உங்களுடைய முகவரி அழிந்திருக்கிறது என்கின்ற பிரச்சினைகள் வருகின்ற போது  தேசிய அடையாள அட்டையில் உங்களுக்கு  என்னமாதிரியான  மாற்றம் தான் தேவை என எதிர்பார்ப்பவர்களுக்கான முக்கியமான பதிவு இது


 அவற்றை  நாம் எப்படி செய்து கொள்ளலாம்? அவற்றிற்கான ஆவணங்கள் எங்களுக்கு தேவைப்படும்  ஆவணங்கள் என்ன

உங்களுடைய பிறப்புச்சான்றிதழ். மாற்றம் செய்ய வேண்டிய   உங்களுடைய பழைய தேசிய அடையாள அட்டை அடுத்ததாக உங்களுடைய நிடற்படப் பிரதி  குறிப்பாக உங்களுடைய பெயரில் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சொன்னால் உங்களுடைய திருமணச் சான்றிதழ் போதுமானது நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால் கெஸட் அறிவித்தல் தேவைப்படும்

அடுத்ததாக உங்களுடைய அட்ரஸில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்றால் உங்களுடைய மின்சார பில் அல்லது தண்ணீர் பில் அல்லது உங்களுடைய தொலைபேசி பில் தேவைப்படும் 

இவற்றை நீங்கள் தயாராக வைத்திருந்தாலும்  உங்களுடைய கிராம அலுவலருடைய உறுதிப்படுத்தல் கடிதம்.அதாவது  நீங்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்தான் என்பதற்கான ஒரு உறுதிப்படுத்தல் கடிதம் தேவைப்படும். 

அடுத்ததாக உங்களுடைய தொழிலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சொன்னால் உங்களுடைய தொழிலை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு கடிதம் தேவைப்படும். பின்னர் உங்களுடைய கிராம அலுவலரிடம் பெற்றுக்கொண்ட விண்ணப்ப படிவத்தையும் முழுமையாக நிரப்ப வேண்டும் இவற்றையெல்லாம் பெற்றுக்கொண்டு கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளரிடம் கையொப்பத்தைப் பெற்று நீங்கள் அங்கேயே அதாவது பிரதேச செயலகத்திலேயே  சமர்ப்பிக்க முடியும். 

அவர்கள் அவற்றை ஆட்பதிவு திணைக்களத்திற்கு அனுப்புவார்கள். நீங்கள் அதில் பதிவு செய்த விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் கொடுத்த  முகவரிக்கு உங்களுடைய தேசிய அடையாள அட்டை வந்து சேரும். 

உங்களுக்கு உடனடியாகத் தேவை ஒரே நாளில் எடுக்க வேண்டும் என்று நினைத்தால்  நீங்கள் குறித்த  ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு பிரதேச செயலாளரிடம் கையொப்பத்தையும் பெற்றுக்கொண்டு உடனடியாக மாகாணத்தில் இருக்கக்கூடிய ஆட்பதிவு திணைக்களத்திற்கு  சென்று நேரடியாக கொடுக்கலாம் அன்றைய தினமே  உங்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் 

அல்லது கொழும்பு பத்ரமுல்லையில் இருக்கக்கூடிய பிரதான ஆப்பதிவு திணைக்களத்தில் நீங்கள் சென்று ஆவணங்களை சரியாக சமர்ப்பிக்கிற போது  உங்களுக்கு உடனடியாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். 

அவ்வாறு நீங்கள் உடனடியாகப் பெறுகின்ற போது மேலேதிக கட்டணமும் செலுத்த வேண்டி ஏற்படும்  அவற்றை கட்டணம் எவ்வளவு என்பது தொடர்பாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் மேலும்  தூரப் பிரதேசங்களில் இருந்து பத்தரமுல்லை செல்பவர்கள் அதிகாலையிலேயே சென்று விட வேண்டும்  ஏன் என்றால் விடியக் காலையில் 5.மணிக் கெல்லாம் டோக்கன் பெறுவதற்கு  பயணாளர்கள் வரிசையில் நிற்பார்கள் 

மேலதிக தவல்களை கிராமசேவையாளர்கள் பிரதேச செயலாளர்களிடன் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள் யாருக்காவது பயன்படும்

@tamilviyugam

No comments