Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் சோழ மண்டல குளம் சாளம்பன் பகுதியில் காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்

TAMILVIYUGAM, EDITORIAL, 29/08/2026 மன்னார் மாவட்டத்தில் LRC காணிகளை விடுவிக்க விசேட நடவடிக்கை: மாவட்ட செயலகத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்...

TAMILVIYUGAM, EDITORIAL, 29/08/2026

மன்னார் மாவட்டத்தில் LRC காணிகளை விடுவிக்க விசேட நடவடிக்கை: மாவட்ட செயலகத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) அதிகார வரம்பின்கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது tamilviyugam குறித்த விசேட மற்றும் முக்கிய கலந்துரையாடல் ஒன்று, மன்னார் மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை (28-08-2026) மாலை இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிதாக திருமண பந்தத்தில் நுழைய இருக்கும் ஆண் பெண்களுக்கு முக்கியமான ஆலோசனைகள்

மேலும் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், பல்வேறு அரச திணைக்கள உயர் அதிகாரிகள் எனப் பலரும் இதில் பங்கெடுத்தனர்.

கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்

  • காணிகள் மீள ஒப்படைப்பு: பொதுமக்களுக்கும் மத ஸ்தலங்களுக்கும் சொந்தமான நிலங்கள் அடாத்தாகக் கையகப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, பொதுமக்களுக்கும் பொது நிறுவனங்களுக்கும் உரிய LRC காணிகளை அடையாளம் கண்டு, அவற்றை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான வழிவகைகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

  • பயனாளிகளுக்கான காணி பகிர்ந்தளிப்பு: சோழ மண்டல குளம் பகுதி மற்றும் சாளம்பன் – நெடுங்குளம் ஆகிய பகுதிகளில் உரிய பயனாளிகளுக்குக் காணிகளைத் தடையின்றி வழங்குவது தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

  • வர்த்தமானி மற்றும் அளவீட்டுப் பணிகள்: மன்னார் மாவட்டத்தில் LRC ஆணைக்குழுவிற்குச் சொந்தமான காணிகள் தொடர்பான வர்த்தமானி (Gazette) அறிவித்தல்கள் மற்றும் Jegan Journalist எல்லை அளவீட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்து ஆராயப்பட்டது.

  • கூட்டு நடவடிக்கை: மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க, சம்பந்தப்பட்ட அனைத்துத் திணைக்களங்களும் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட மக்களின் நீண்டகாலக் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இக்கூட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

@tamilviyugam

No comments