Page Nav

HIDE

Breaking News:

latest

இலங்கையில் அல்லிராணியின் அரண்மனைப் புதையல் அமைந்திருக்கும் நானாட்டான் ராசமடு கிராமம்-Jegan Media

TAMILVIYUGAM.COM, HISTORICAL, தமிழ் பேசும் சமூகமாகிய நாம் எமது வரலாறுகள் குறித்துப் பேசாமல், விவாதிக்காமல், அவற்றை ஆவணப்படுத்தாமல் விட்டதன்...

TAMILVIYUGAM.COM, HISTORICAL,

தமிழ் பேசும் சமூகமாகிய நாம் எமது வரலாறுகள் குறித்துப் பேசாமல், விவாதிக்காமல், அவற்றை ஆவணப்படுத்தாமல் விட்டதன் விளைவே இன்று நமது நிலங்களும் வளங்களும் பறிக்கப்பட்டு, உரிமைகளற்றவர்களாக ஒதுக்கப்பட்டுள்ளோம். எமது பூர்வீகத்தை மீட்க வேண்டுமாயின், வரலாற்றைத் தேடி ஆவணப்படுத்துவது tamilviyugam ஒவ்வொருவரினதும் கடமையாகும். அந்த வகையில், ஈழத் தமிழர் வரலாற்றின் மிக முக்கிய சான்றாக விளங்கும் அல்லிராணி மற்றும் அவரது அரண்மனை இருந்த ராசமடு பகுதி குறித்த சில அதிரடி வரலாற்று உண்மைகள் இதோ

தமிழ் வியூகம்  ஆசிரியர் பீடம்

1. அல்லிராணி: மதுரையின் அரசியா? மன்னார் தேசத்தின் பேரரசியா?

அல்லிராணியின் வரலாறு மிக நீண்டது. அவர் தமிழகத்து மதுரையைச் சேர்ந்தவரா அல்லது இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவரா என்ற குழப்பம் வரலாற்றாசிரியர்களிடையே உண்டு. இதற்குப் பிரதான காரணம் 'மதுரை' என்ற இடப்பெயர்.

பண்டைய தமிழர்களின் நிலமான குமரிக்கண்டம் (லெமூரியா) கடலில் முற்றிலும் மூழ்கிவிட்டதாக நம்பப்படுவது தவறு. அந்தக் கண்டத்தின் எஞ்சிய பகுதியே இன்றைய இலங்கை. சங்க இலக்கியங்கள் கூறும் 'மதுரை' என்பது இன்றைய தமிழக மதுரை அல்ல அது குமரிக்கண்டத்து மதுரை. அந்த மதுரையின் பேரரசியே அல்லிராணி. ஆகவே, அல்லியின் தோற்றம் மன்னார் மாதோட்ட தேசம் என்பதில் ஐயமில்லை.

மட்டக்களப்பில் மீன் பாடுவது உண்மையா? அறிவியல் இலக்கியம் சொல்வது என்ன?

2. வரலாற்றுச் சான்றுகள்: அல்லிராணி கோட்டை

மன்னார் மாவட்டத்தின் தென் கடற்கரையில் அமைந்துள்ள அல்லிராணி கோட்டை இதற்கு மிகச்சிறந்த சான்றாகும். பொன்பரப்பி, குதிரைமலை போன்ற இடங்களை அல்லிராணி ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

  • கம்பராமாயணச் சான்று: கம்பராமாயணத்தின் ஊர் தேடும் படலப் பாடலில், இந்தக் கோட்டை கடலோடு இயற்கையாய் அமைந்த 'காவல் அரண்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அனுமன் எரித்த நகரம்: ராமாயண யுத்தத்தில் அனுமன் முதலில் எரித்த நகரம் மாந்தை மாதோட்டமே என்பதற்குப் பல இலக்கியச் சான்றுகள் உள்ளன.

3. ராசமடு: மறைக்கப்பட்ட அரண்மனை வளாகம்

மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள இராசமடு பகுதிக்கும் அல்லிராணிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அண்மையில் கண்டறியப்பட்ட கையெழுத்துப் பிரதி ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

  • ஆலய வரலாறு: 50 ஆண்டுகளுக்கு முன், நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தைக் tamilvyugam கட்டும்போது, இராசமடு அல்லி அரண்மனையின் இடிபாடுகளிலிருந்து கற்கள் கொண்டு வரப்பட்டதாகக் கணக்காளர் சி. சின்னையா அவர்களால் எழுதப்பட்ட சம்பவத் திரட்டுப் புத்தகம் கூறுகிறது.

  • முன் இவ்விடத்தில் பழங்கால  அரச மாளிகைகள் இருந்தது தொல் பொருள் திணைக்களத்தினர் இப்பகுதியில் பாண்டியர்களின் நாணயங்கள் மற்றும் பலவிதமாக பொருட்கள் எடுத்துச் சென்றதாக நானாட்டான் சிறி செல்வமுத்து மாரியம்மன் ஆலத்தின் சம்பவத் திரட்டு புத்தகத்தில்  1958 காலப் பகுயில் அறங்காலர் சி.சின்னைனயா என்னபவரால் எழுதி வைக்கப்பட்டுள்ளது 

  • 1968 ஆண்டு காலப்பகுதியில் ராசமடுவில் இருக்கும் புதையல் கிடாரஙங்களை எடுப்பதற்கு  இந்தியாவில் இருந்து மந்திரவாதிகள் பூசாரிகள் வரவழைக்கப்பட்டு பெரும் பூசைககள் நடாத்தி எடுக்கப் போகும் நேரத்தில் கலவரப் படுத்தி கை கூடாமல் போனதாக அந்த சம்பவத் திரட்டு புத்தகத்தில் எழுதப் பட்டுள்ளது 

    அது மட்டுமல்ல   இப்பகுதியில் புதையல் இருப்பது  இந்த ஊரில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரியும் அதிலும்  வெளியிடங்களில் இருந்து பல மாந்ரீகர்கள் வரவழைக்கப்பட்டு  தொடர் முயற்சி எடுத்துதும் பலனளிக்கவில்லை

  • இது தொடர்பான பல விடயங்கள் நானாட்டன் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலயத்தின் சம்பவத் திரட்டு புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது 

  • தொல்லியல் கண்டுபிடிப்புகள்: 1970-களில் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பாண்டியர் கால மீன் சின்னம் பொறித்த நாணயங்கள், விளக்குகள் மற்றும் மட்பாண்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

4. ராசமடு புதையலும் குருமுனி பாதுகாப்பும்

ராசமடுப் பகுதியில் இன்றும் ஒரு மாபெரும் புதையல் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் புதையலை எடுக்க இன்றுவரை எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. அந்தப் புதையல்களை 'குருமுனி' என்பவர் பாதுகாப்பதாக மாந்திரீக ரீதியான நம்பிக்கைகளும் அப்பகுதி மக்களிடையே நிலவுகின்றன. இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, அந்த மண்ணின் அடியில் புதைந்து கிடக்கும் வரலாற்றுப் பொக்கிஷங்களின் குறியீடாகவும் இதைப் பார்க்கலாம்.

 ராஜ சபை 

இந்த அல்லி அரண்மனை வளாகம் தொடர்பில் மாந்த்ரீகர்களை சந்தித்து கேட்ட போது  இது ஒரு ராஜ சபை நடைபெற்ற இடமாகவும்  பல திட்டங்கள் வகுத்து நடைமுறைப் படுத்தும் இடம் என்று கூறுகிறார்கள் 

வரலாற்றுப் பொக்கிஷம் 

இந்த அல்லராணியின்  அரண்மனை இருந்த பகுதியில்  ஏதோ ஒரு சக்தி  எவரையும் குடியிருக்க விடாது  சில வருடங்களுக்கு முன் அப்பகுதியில் மக்கள் குடியிருப்பதற்காக   பெது மக்களுக்கு காணிகள் வழங்கி வீட்டுத் திட்டங்களும் வழங்கப்பட்டது  வீடுகள்  கட்டி முடிக்காமல் அரை குறையாக முன்பு போலவே   அப்படியே கிடக்கிறது  கிட்டத்தட்ட அஅது ஒரு வரலாற்று பொக்கிஷமாக  இருக்கிறது 

5. இடப்பெயர்களும் 'மடு' என்பதன் அர்த்தமும்

மாதோட்டப் பகுதியில் ராசமடுவைப் போன்றே பெரியமடு, பள்ளமடு, நயினாமடு எனப் பல இடப்பெயர்கள் 'மடு' என முடிவடைகின்றன.

  • மடு: இதற்குப் பள்ளம், கிடங்கு அல்லது குழி என்று பொருள். மேலும், இது 'கொலைக்களம்' அல்லது 'தீ பரவுதல்' போன்ற அர்த்தங்களையும் குறிக்கும். இவை ஒவ்வொன்றும் அல்லிராணியின் ஆட்சி மற்றும் போர் முறைகளுடன் பிணைந்துள்ளதைக் காட்டுகிறது.

அல்லிராணி என்பவள் உலகிலேயே மிக அழகானவள், வீரமிக்கவள். ஆண் வாசம் பிடிக்காத, எதிரிப் படைகளைச் சிதறடித்த அந்தப் பேரரசியின் வரலாறு ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஈழத் தமிழர்கள் எமது வரலாறு தொடர்பாகத் தேட வேண்டும், விவாதிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலச் சந்ததியினருக்கு உண்மையான வரலாற்றைக் கொண்டு சேர்க்க முடியும்.

நன்றி ஆய்வு:- ஜெகன் Journalist,

உசாத்துணை நூல்கள்:

  • கம்பராமாயணம்

  • தமிழர் வரலாறும் இலங்கை இடப் பெயர் ஆய்வும்

  • மகாவம்சம்

@tamilviyugam

No comments