Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் பொது வைத்தியசாலையின் நீண்டகால மருத்துவர் பற்றாக்குறைக்கு தீர்வு

TAMILVIYUGAM.COM, EDITORIAL, மன்னார் பொது வைத்தியசாலைக்கு 8 புதிய உள்ளகப் பயிற்சி மருத்துவர்கள் வருகை: வெகுமதியாகக் கிடைத்த தீர்வு மன்னார் ம...

TAMILVIYUGAM.COM, EDITORIAL,

மன்னார் பொது வைத்தியசாலைக்கு 8 புதிய உள்ளகப் பயிற்சி மருத்துவர்கள் வருகை: வெகுமதியாகக் கிடைத்த தீர்வு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவி வந்த மருத்துவ அதிகாரிகளின் பற்றாக்குறைக்குத் தீர்வாக, புதிதாக 8 உள்ளகப் பயிற்சி மருத்துவ அதிகாரிகள் tamilviyugam நியமிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலைக்கு வருகை தந்த இப் புதிய மருத்துவர்களை வரவேற்கும் சிறப்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (28) காலை 9.00 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம்.ஆசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல முக்கிய விருந்தினர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்பு இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள் ஆசீர்வழங்கி நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் tamilvyugam ஆண்டகை, பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.ஜெகதீஸ்வரன் மற்றும் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு புதிய மருத்துவர்களை வரவேற்றனர்.

கௌரவிப்பு நிகழ்வு வைத்தியசாலைக்கு வருகை தந்த 8 உள்ளகப் பயிற்சி மருத்துவ அதிகாரிகளுக்கும் விருந்தினர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவம் அளிக்கப்பட்டது. இந்நிழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், சிரேஷ்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் வைத்தியசாலைப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நேபாள பேரழிவில் குறைந்த மனிதாபிமானம் 332 உயிர்கள் பலி 384 சுற்றுலா பயணிகள் மாயம்

நீண்டகாலப் பிரச்சினைக்குக் கிடைத்த தீர்வு மன்னார் மாவட்டத்தில் தரமான சுகாதார சேவைகளைப் பெறுவதில் மருத்துவர் பற்றாக்குறை பெரும் சவாலாக இருந்து வந்தது. மக்கள் பிரதிநிதிகள், சுகாதார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொடர்ச்சியான முயற்சியின் பலனாக தற்போது இந்த 8 புதிய பயிற்சி மருத்துவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மன்னார் மாவட்ட மக்களின் மருத்துவத் தேவைகள் விரைவாகவும் திறம்படவும் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

@tamilviyugam

No comments